Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவுக்கு பொல்லார்ட் மாதிரி.. மும்பைக்கு வெங்கடேஷ் ஐயர்.. பல்தான்ஸ்-க்கு 158 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற 158 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கியது. கொல்கத்தாவில் கனமழை பெய்ததால், போட்டி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் போட்டி 16 ஓவர்கள் ஆட்டமாக நடக்கும் என்று நடுவர்கள் அறிவித்தனர். இதன்பின் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார்.

IPL 2024 KKR vs MI KKR Set a target of 158 runs for Mumbai Indians to win at Kolkata

வழக்கம் போல் கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மும்பை அணி தரப்பில் "பேபி மலிங்கா" துஷாரா முதல் ஓவரை வீசினார். முதல் பந்திலேயே பில் சால்ட் சிக்சருடன் தொடங்க, 5வது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து பும்ரா வீசிய 2வது ஓவரின் முதல் பந்திலேயே சுனில் நரைன் போல்டாகி வெளியேறினார். இதனால் கேகேஆர் அணி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் வெங்கடேஷ் ஐயர் - ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இணைந்தது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர், பும்ரா வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 15 ரன்களை விளாசினார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களில் ஆட்டமிழக்க, நிதிஷ் ராணா களம் புகுந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி கேகேஆர் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, உடனடியாக ரஸ்ஸல் வந்தார்.

அவர் எதிர்கொண்ட 2வது பந்திலேயே சிக்சர் அடிக்க, 10வது ஓவரை வீசிய துஷாராவையும் அட்டாக் செய்தார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 97 ரன்கள் சேர்த்தது. இதன்பின் கேகேஆர் அணி கியரை மாற்றியது. இதனை கணித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா உடனடியாக பும்ராவை அட்டாக்கில் கொண்டு வந்தார். இந்த ஓவரில் நிதிஷ் ராணா 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில், கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க முயன்று 33 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் பியூஷ் சாவ்லா பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று ரஸ்ஸல் 24 ரன்களில் ஆட்டமிழக்க, கேகேஆர் அணி 13 ஓவர்கள் முடிவில் 125 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நேரத்தில் ரிங்கு சிங் - ரமன்தீப் சிங் கூட்டணி இணைந்தது. இவர்கள் 14வது ஓவரில் 11 ரன்களும், 15வது ஓவரில் 11 ரன்களும் சேர்த்தனர். கடைசி ஓவரை வீச மீண்டும் பும்ரா வந்தார். இந்த ஓவரின் 2வது பந்தில் ரிங்கு சிங் 20 ரன்களில் ஆட்டமிழக்க, இந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கேகேஆர் அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது.

Story first published: Saturday, May 11, 2024, 22:59 [IST]
Other articles published on May 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+