For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. அநியாயம் செய்த பஞ்சாப்.. கம்பீரை கிண்டல் செய்யும் மிரட்டல் மீம்ஸ்!

கொல்கத்தா : கேகேஆர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் மொத்தமாக 42 சிக்ஸ், 37 ஃபோர்ஸ் விளாசப்பட்டது. இதனால் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடிக்கப்பட்ட போட்டி என்ற புதிய சாதனை படைக்கப்பட்டது. இதனை கிண்டல் செய்யும் வகையில், பரிதாபங்கள் சுதாகரிடம் கோபி, "இஏ ஸ்போர்ட்ஸ், ஹேண்ட் கிரிக்கெட் வீடியோ கேம்ல கூட இவ்வளவு சிக்ஸ் அடிக்க மாட்டாங்கடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்ட மீம் அட்ரா சக்க காமெடி.

IPL 2024 KKR vs PBKS Match Fantastic memes from Social media after pbks won by 8 wickets against kkr at kolkata

பருத்தி வீரன் படத்தில் "வாழனும்னு வந்தவங்கல அப்படியே அனுப்பி விட்டீங்கள்ல டா" என்று கார்த்தி கூறுவார். அதனை அப்படியே பஞ்சாப் - கேகேஆர் போட்டியை சொல்வதாக மாற்றி, "2 டீம் பவுலர்களும் க்ரீஸ்ல நின்னு 4 பக்கமும் பவுண்டரிய நோக்கி பால்களை 20 ஓவர்கள் முழுவதும் எறிந்தால் கூட இவ்வளவு ரன்கள் வராதுடா.. அநியாயம் பண்ணறீங்கடா டேய்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

IPL 2024 KKR vs PBKS Match Fantastic memes from Social media after pbks won by 8 wickets against kkr at kolkata

மந்திரப் புன்னகை படத்தில் சந்தானத்திடம் அவரது மாமனார், "என்னதான் நைட் ஷிட்ஃப்-னாலும் நைட் 8 மணிக்குலாம் வீட்டில் இருக்கனும்ல" என்று கூறுவார். நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் ஹர்சல் படேல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரருக்கு அளிக்கப்படும் பர்பிள் கேப்பை பெற்றார். இதனை சந்தானம் மாமனார் சொல்வதை ஹர்சல் படேல் சொல்வதாக மாற்றி, "ரன் அடிக்காவிட்டாலும் விக்கெட்ஸ் எடுக்கிறேன்ல" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

IPL 2024 KKR vs PBKS Match Fantastic memes from Social media after pbks won by 8 wickets against kkr at kolkata

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் வில்லனின் தலையை வெட்டிவிட்டு, "ஒரு லெவல்-க்கு மேல நம்மக்கிட்ட பேச்சு கிடையாது.. வீச்சுதான்.." என்பார். அதனை ஷஷாங்க் சிங் சமீரா பவுலிங்கில் 3 சிக்சர்களை விளாசிய பின், "ஒரு லெவல்-க்கு மேல நம்மக்கிட்ட பேச்சு கிடையாது.. வீச்சுதான்.." சொல்வதாக உருவாக்கப்பட்ட மீம் மரண மாஸ்.

IPL 2024 KKR vs PBKS Match Fantastic memes from Social media after pbks won by 8 wickets against kkr at kolkata

பேட்ட படத்தில் வில்லன் நவாஸுதீன் சித்திக் ரஜினியை பார்த்துவிட்டு, "பேட்ட" என்று பில்டப் கொடுப்பார். அதனை அப்படியே நீண்ட நாட்களுக்கு பின் பேர்ஸ்டோவ் சதம் விளாசி பஞ்சாப் அணியை வெற்றிபெற வைத்தார். இதில் நவாஸுதீன் சித்திக்கை ஐதராபாத் அணி ரசிகர்களாக மாற்றி, "பேட்ட" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

IPL 2024 KKR vs PBKS Match Fantastic memes from Social media after pbks won by 8 wickets against kkr at kolkata
Story first published: Saturday, April 27, 2024, 10:36 [IST]
Other articles published on Apr 27, 2024
English summary
IPL 2024 KKR vs PBKS Match : Fantastic memes from Social media after pbks won by 8 wickets against kkr at kolkata
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+