For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

KKR vs RCB : ரகிட ரகிட ரகிட.. சோக்கர்ஸ் ஆர்சிபி-னா சும்மாவா.. ஈ சாலாவை பொளக்கும் தெறி மீம்ஸ்!

கொல்கத்தா : கொல்கத்தா - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

விரலுக்கேற்ற வீக்கம் படத்தில் வடிவேலுவின் நிலையை அறிந்து சகலைகளான சுந்தர்ராஜன் மற்றும் பாண்டியாராஜ் இருவரும், "நம்ம நிலைமை பரவாலை.. இவரோட நிலைமை ரொம்ப பரிதாபமாக இருக்கு" என்று சொல்வார்கள். அதனை அப்படியே மாற்றி சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளின் ரசிகர்கள் இருவரும், ஆர்சிபி ரசிகர்களை பார்த்து, "நம்ம நிலைமை பரவாயில்லை.. ஆனால் இவரோட நிலைமை ரொம்ப பரிதாபமாக இருக்கு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

IPL 2024 KKR vs RCB Match Fantastic memes from Social media after rcb lost by 1 runs against kkr at Kolkata

நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி பவுலிங் செய்ய களமிறங்கிய போது, விராட் கோலி திடீரென ஆரஞ்ச் கேப்பை நடுவரிடம் கொடுத்துவிட்டு, பந்தை வாங்கி கொண்டு ரன் அப்பை செய்தார். இந்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை விராட் கோலி டீஸ் செய்வதாக உற்சாகமாகினர். இதனை பகிர்ந்து ரசிகர் ஒருவர், சச்சின் டெண்டுல்கருக்கு பின் இறுதியாக ஒரு மும்பை வீரர் ஆரஞ்ச் கேப்பை பெற்றுள்ளார் என்று கிண்டல் செய்தார். அதாவது நடுவரை மும்பை வீரராக அடையாளப்படுத்தி ரசிகர் பதிவிட்டுள்ள சம்பவம் ஜாலியோ ஜிம்கானா.

IPL 2024 KKR vs RCB Match Fantastic memes from Social media after rcb lost by 1 runs against kkr at Kolkata

வானம் படத்தில் சிம்புவிடம் அவரின் காதலி நியூ இயர் பாஸ் வாங்கிவிட்டியா என்று கேட்டுக் கொண்டே இருப்பார். ஆனால் மறுமுனையில் கொள்ளையடித்த பணத்தை மீண்டும் கொடுத்துவிட்டு சிம்பு நெகிழ்ச்சியில் கண்ணீர் சிந்துவார். செண்டிமெண்ட் காட்சியான இதனை அப்படியே, சிம்புவின் காதலியாக ஆர்சிபி மகளிர் அணியையும், சிம்புவாக ஆர்சிபி ஆடவர் அணியாகவும் மாற்றி, "பிளே ஆஃப் பாஸஸ் வாங்கிவிட்டியா ராஜ்" என்று கேட்பதாகவும், ஆர்சிபி அணி 2 புள்ளிகளுடன் கண்ணீர் சிந்துவது போலவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

IPL 2024 KKR vs RCB Match Fantastic memes from Social media after rcb lost by 1 runs against kkr at Kolkata

சந்திரமுகி படத்தில் ரஜினியிடம் இருந்து மனைவியை அழைத்து செல்லும் வடிவேலு, "கெட்டப்பை மாற்றினாலும் கேரக்டரை மாற்றமாட்டுறானே" என்று கூறுவார். அதுபோல் நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்சியை அணிந்து களமிறங்கியது. ஆனாலும் ஒரு ரன்னில் கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் ஆர்சிபியாக ரஜினியையும், ஆர்சிபி ரசிகர்களாக வடிவேலுவை மாற்றி, "ஜெர்சி கலர் மாற்றினாலும், கேரக்டரை மாற்ற மாட்டிகிறானே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒவ்வொரு ரசிகரின் மனசாட்சி.

IPL 2024 KKR vs RCB Match Fantastic memes from Social media after rcb lost by 1 runs against kkr at Kolkata

கலகலப்பு படத்தில் சந்தானத்திடம் நடிகை அஞ்சலி, நான் சீனுவை தான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்று நேரடியாக கூறுவார். இந்த காட்சியில் அஞ்சலியாக டிகேவையும், சந்தானமாக ஆர்சிபி அணியையும் மாற்றி, எல்லா மேட்சும் என்னால் அடிச்சு கொடுக்க முடியாது என்று சொல்வாத உருவாக்கி, தினேஷ் கார்த்திக் 25 ரன்களில் ஆட்டமிழந்து நடந்து செல்லும் புகைப்படத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் உச்சக்கட்ட காமெடி.

IPL 2024 KKR vs RCB Match Fantastic memes from Social media after rcb lost by 1 runs against kkr at Kolkata
Story first published: Monday, April 22, 2024, 11:05 [IST]
Other articles published on Apr 22, 2024
English summary
IPL 2024 KKR vs RCB Match : Fantastic memes from Social media after rcb lost by 1 runs against kkr at Kolkata
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+