Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எலியும், பூனையுமாக மாறிய அஸ்வின், நரைன்.. ஒரே ஓவரில் நிகழ்ந்த மோதல்.. மாற்றி மாற்றி பதிலடி

கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கே கே ஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் தலைசிறந்த ஸ்பின்னர்களான சுனில் நரையினும்,அஸ்வினும் எலியும் பூனையாக செயல்பட்டது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கிரிக்கெட் எப்போதுமே களத்தில் விளையாடப்படும் போட்டியாக இருந்தாலும், அது மனதை கொண்டு விளையாடும் போட்டியாகவே இருக்கிறது. எப்படி செஸ் போட்டியில் வீரர்கள் திட்டம் போட்டு காய் நகர்த்துவார்களோ, அதை போல் கிரிக்கெட்டிலும் பேட்ஸ்மேனும் பவுலர்களும் செயல்படுவார்கள்.

IPL 2024 KKR vs RR - Ashwin and sunil narine takes part in great encounter

இந்த நிலையில் ஆட்டத்தின் 12வது ஓவரில் அஸ்வினும் சுனில் நரைம், அஸ்வினும் அப்படி ஒரு சம்பவத்தை தான் செய்தார்கள். சிக்சர் அடிக்க விடக்கூடாது என அஸ்வினும், அஸ்வின் பிளானை எப்படியாவது சுக்கு நூறாக உடைக்க வேண்டும் என சுனில் நரையினும் மாற்றி மாற்றி அபாரமாக செயல்பட்டார்கள். இதனை விமர்சித்த ஹர்ஷா போக்லே, எலியும், பூனையும் போல் இரு வீரர்களும் செயல்படுவதாக பாராட்டியுள்ளார்.

அதன்படி ஆட்டத்தின் 12 வது ஓவரில் அஸ்வின் வீச வந்தார். அப்போது முதல் பந்தை wide ஆக அஸ்வின் வீசினார். இதை அடுத்து முதல் பந்தை மீண்டும் வீசிய அஸ்வின், பந்தை அடிக்க விடாத படி Wide லைனுக்குள் வீசினார். இதனை புரிந்து கொண்ட சுனில் நரைன் அஸ்வின் திட்டத்தை கணித்து அந்த ஓவரில் இரண்டாவது பந்தில் சிக்ஸரையும், மூன்றாவது பந்தில் பவுண்டரியும் அடித்தார்.

தமது திட்டத்தை சுனில் நரைன் கண்டுபிடித்து விட்டார் என்பதை புரிந்து கொண்ட அஸ்வின் மீண்டும் அஸ்வின் ஆப் ஸ்டம்புக்கு வெளியே பந்தை வீசி அவரை அடிக்கும் வகையில் பந்தைப் போட்டார். ஆனால் பந்து ஓயிடாகும் என நினைத்து நரைன் அதைவிட பந்து சரியாக சென்றது. இதேபோன்று ஐந்தாவது பந்தையும் மீண்டும் ஓயிடு லைன் உள்ளே அஸ்வின் வீசினார்.

இந்த இரண்டு பந்தையும் சுனில் நரைன் அடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஆறாவது பந்தும் அஸ்வின் அதே போல் வீச சுனில் நரைன் அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதன் மூலம் 6 பந்தில் மூன்று பந்து டாட் பாலாகும், மூன்று பந்து ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி என மாறியது. அஸ்வினின் இந்த பன்னிரண்டாவது ஓவரில் சுனில் நரைன் 15 ரன்கள் அடித்தார்.

Story first published: Tuesday, April 16, 2024, 21:52 [IST]
Other articles published on Apr 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+