KKR vs RR : கவுதம் கம்பீர்.. நீங்க சோகமடைய தேவையே இல்லை.. ஓய்வறைக்கே சென்று ஷாரூக் கான் ஆறுதல்!
கொல்கத்தா : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் கேகேஆர் அணி வீரர்களுக்கு அந்த அணியின் உரிமையாளர் ஷாரூக் கான் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் விளாசப்பட்டது. சிறப்பாக விளையாடிய சுனில் நரைன் 109 ரன்களை விளாசி அசத்தினார்.

இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பாக விளையாடிய பட்லர் 60 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி என்ற புதிய வரலாற்றை ராஜஸ்தான் அணி படைத்தது.
இந்த போட்டி கொல்கத்தாவின் சொந்த மைதானத்தில் நடைபெற்றதால், அந்த அணியின் உரிமையாளர் நடிகர் ஷாரூக் கான் நேரில் வந்தார். வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்து கேகேஆர் அணியின் பேட்டிங்கின் போது பால்கனியில் நின்று வீரர்களை ஆட்டத்தை ரசித்தார். குறிப்பாக சுனில் நரைன் சதம் விளாசிய போது தனது ஸ்டைலில் முத்தங்களை பறக்கவிட்டார்.
ஆனால் ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது நடிகர் ஷாரூக் கான் விஐபி அறையில் அமர்ந்திருந்தார். ஏனென்றால் ராஜஸ்தான் அணி அதிரடியாக ரன்கள் குவித்து கொண்டிருந்தது. இறுதியாக ராஜஸ்தான் அணி வெற்றிபெற்ற பின் மைதானத்திற்குள் வந்த ஷாரூக் கான், ராஜஸ்தான் மற்றும் கேகேஆர் அணி வீரர்களுக்கு வாழ்த்து உரையாடினார்.
இதன்பின் கேகேஆர் அணியின் ஓய்வறைக்கு சென்ற ஷாரூக் கான், விளையாட்டில் சில நேரங்களில் நாம் வெற்றி பெற தகுதியில்லாதவர்களாக இருப்போம். வாழ்க்கையும் அப்படிதான். மாறிக் கொண்டே இருக்கும். இந்த போட்டியில் நான் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் நமது வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். நம்மை நினைத்து அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
இந்த தோல்விக்காக நாம் சோகமடைய தேவையில்லை. ஒவ்வொரு முறை ஓய்வறைக்கு வரும் போது, நம்பிக்கையுடன் மகிழ்ச்சியுடன் வர வேண்டும். அதனை எப்போதும் பின்பற்றுங்கள். வீரர்கள் அனைவரும் களத்தில் நட்புடன் இருக்கிறீர்கள். அதனை தொடர வேண்டும். குறிப்பாக கவுதம் கம்பீர், சோகமாக இருக்காதீர்கள் என்று ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
Story first published: Wednesday, April 17, 2024, 10:47 [IST]
Other articles published on Apr 17, 2024


Click it and Unblock the Notifications