For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

KKR vs RR- ஐபிஎல் வரலாற்றில் சுனில் நரைன் முதல் சதம்..223 ரன்கள் குவித்த கேகேஆர்..தடுமாறிய பவுலர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே கே ஆர் அணி வீரர் சுனில் நரேன் 49 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

கொல்கத்தா ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமானது என்பதால் சேசிங் செய்வதே இங்கு சிறப்பாக இருக்கும். இதனால் முதலில் பேட்டிங் செய்த கே கே ஆர் வீரர்கள் பெரிய இலக்கை எட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கினர். தொடக்க வீரராக களம் இறங்கிய பில் சால்ட் 13 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினார்.

IPL 2024 KKR vs RR- Sunil Narine century powers Kolkatta in to mammoth target

இதை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுனில் நரேன் மற்றும் ஆங்கிரிஸ் ரகுவான்ஷி ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தனர். ரகுவான்ஷி 18 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சேர்த்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் 11 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் எல் பி டபிள்யூ ஆனார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் சுனில் நரைன் அதிரடியை காட்டினார். முதலில் 29 பந்துகளில் அரை சதத்தை பதிவு செய்த சுனில் நரேன் தொடர்ந்து ராஜஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்தார்.இதன் மூலம் கே கே ஆர் ஸ்கோர் கிடு கிடுவென உயர்ந்தது.

ஒரு கட்டத்தில் 49 பந்துகளில் எல்லாம் சுனில் நரை சதத்தை பதிவு செய்தார். இன்னும் நான்கு ஓவர்கள் எஞ்சி இருந்ததால் சுனில் நரைன் 150 ரன்களுக்கு மேல் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பவுல்ட் வீசிய அபார யாக்கரால் சுனில் நரைன் ஆட்டம் இழந்தார். மொத்தம் 56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 109 ரன்கள் சேர்த்தார்.

அதிரடி வீரர் ஆண்ட்ரூ ரஸில் 13 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 8 ரன்களிலும் வெளியேற இறுதியில் ரிங்கு சிங் மட்டும் 9 பந்துகளில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி என 20 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் கே கே ஆர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Story first published: Tuesday, April 16, 2024, 21:33 [IST]
Other articles published on Apr 16, 2024
English summary
IPL 2024 KKR vs RR- Sunil Narine century powers Kolkatta in to mammoth target ஐபிஎல் வரலாற்றில் சுனில் நரைன் முதல் சதம்..230 ரன்கள் குவித்த கேகேஆர்..தடுமாறிய பவுலர்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+