Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

49 பந்தில் சுனில் நரைன் சதம்.. 2வது பந்திலேயே கேட்ச்சை கோட்டை விட்ட பராக்..பாய்ந்து பிடித்த ஆவேஷ்

கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 31வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பல பரிட்சை நடத்துகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய கேகேஆர் அணியில் பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் இமாலய இலக்கை எட்ட வேண்டிய உத்வேகத்தில் களமிறங்கினர். முதல் ஓவரை ட்ரெண்ட் பவுல்ட் வீசினார். அப்போது ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே பில் சால்ட் கொடுத்த அழகான கேட்சை ரியான் பராக் தவற விட்டார்.

IPL 2024 KKR vs RR- Sunil Narine scored 29 balls half century as Avesh brilliantly caught phil salt

கைக்கு அல்வா போல் வந்த கேட்சை பராக் தவற விட்டதால், ராஜஸ்தான் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பவுல்டும் விரக்தி அடைந்தனர். எப்போதும் இதுபோல் ஒரு வீரருக்கு கேட்ச் மிஸ் ஆகி வாய்ப்பு கிடைத்தால், அதனை அவர் சரியாக பயன்படுத்தி ரன்களை சேர்ப்பார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் சுனில் நரைன் மட்டும் தான் அதிரடியை காட்டினார்.

ஆனால், பில் சால்ட் கொஞ்சம் தடுமாறினார். இந்த நிலையில் ஆட்டத்தின் 3.3வது ஓவரில் ஆவேஷ் கான் பந்து வீசினார். அப்போது ஃபில் சால்ட் அந்த பந்தை நேராக அடித்தார். இந்த தருணத்தில் ஆவேஷ் கான் தன்னுடைய ஒரு கையை நீட்டி பாய்ந்து அந்த கேச்சை பிடித்தார். இதன்மூலம் பில் சால்ட் 10 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இந்த பந்து பவுண்டரி தான் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆவேஷ் கான் அபாரமாக கேட்ச் பிடித்தது ராஜஸ்தான் செய்த தவறை சரி செய்யும் விதமாக அமைந்தது. இந்த நிலையில் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வரும் சுனில் நரைன், 29 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் சுனில் நரைன் தன்னுடைய அதிரடியை தொடர்ந்து காட்டினார். ஐந்து பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் என சுனில் பட்டையை கிளப்பினார். இதன் காரணமாக கொல்கத்தா அணி 10 ஓவர்களில் எல்லாம் 100 ரன்களை கடந்தது.

இளம் வீரர் ஆங்கிரிஸ் ரகுவான்ஷி தன் பங்கிற்கு அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து 18 பந்தில் 30 ரன்கள் சேர்த்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் சுனில் நரைன் அதிரடியை காட்டினார். இதன் மூலம் சுனில் நரைன் 49 பந்துகளில் சதம் விளாசினார். இது சுனில் நரைன் அடிக்கும் முதல் சதம் ஆகும். ஐபிஎல் வரலாற்றில் கேகேஆர் வீரர்கள் அடித்த 3வது சதம் இதுவாகும்.

Story first published: Tuesday, April 16, 2024, 20:48 [IST]
Other articles published on Apr 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+