KKR vs SRH : களம் 8ல சைலன்சரையே சைலண்ட் பண்ணிட்டாங்க.. கம்மின்ஸ்-க்கு ஆப்பு.. வெறித்தன மீம்ஸ்!
சென்னை : கேகேஆர் - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் பைனலில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
ஆடுகளம் படத்தில் சேவல் சண்டையின் போது, "களம் 8ல நம்ம கருப்பு சேவல் பந்தயம் எதிரணி சேவலை கொன்னே போட்ருச்சுப்பா" என்று ஒரு வசனம் வரும். அந்த வசனத்தை அப்படியே கேகேஆர் மற்றும் ஐதராபாத் அணிக்கு மாற்றி, "களம் 8ல.. சைலன்சரையே சைலன்ஸ் பண்ணி 3வது முறையாக கப்பை ஜெய்ச்சிட்டாங்கப்பா கேகேஆர்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ்.

களவாணி படத்தில் பால்டாயில் குடித்துவிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பஞ்சாயத்தை பார்க்க வரும் ஊர்த்தலைவர், "என்னடி ராஸ்கல்.. 2 பிள்ளையை பெத்துட்டு பால்டாயிலா குடிக்கிற.. பால்டாயில்" என்பார். அந்த வசனத்தை அப்படியே ஸ்டார்க்கிற்கு மாற்றி, "பிளடி ராஸ்கல்.. லீக் போட்டிகளில் ஆக்டிங்கா போட்ற" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

விக்ரம் படத்தில் கமல்ஹாசன் முகமூடியை கழற்றிவிட்டு சவால் விட்டு புறப்படும் போது அங்கு நிற்கும் ஃபகத் ஃபாசில், "Once Upon a time.. there lived a Ghost.. He is not a Myth Anymore" என்று மரண மாஸ் வசத்தை கூறுவார். அதனை அப்படியே மிட்சல் ஸ்டார்க் பவுலிங்கிற்கு மாற்றி, 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை பைனைல் நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லத்தை வீழ்த்தியதை போல், இன்று அபிஷேக் சர்மாவை வீழ்த்தியதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அலப்பறை கிளப்புறோம் ரகம்.

இங்கிலிஷ்காரன் படத்தில் பேய் வேடம் போட்டு சத்யராஜை பயமுறுத்த வரும் வடிவேலு, சந்திரமுகியாக மாறி நிற்கும் வடிவேலுவை பார்த்து பயந்து ஓடுவார். இதில் சத்யராஜாக கம்மின்ஸையும், வடிவேலுவாக காவ்யா மாறனையும் மாற்றி, "ஆஹா.. கேகேஆர் ஃபேன்ஸ்-க்கு பதிலாக மாற்றி ஐதராபாத் ஃபேன்ஸை சைலண்ட் பன்றானே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தை சந்திக்கும் விநாயகன், "இப்படியொரு பிளாஷ்பேக் இருக்கும்னு சத்தியமாயிட்டு ஸ்வப்னத்திலும் கண்டில்ல சாரே" என்று கூறுவார். இதில் கம்மின்ஸாக ரஜினியையும், விநாயகனாக ஸ்ரேயாஸ் ஐயரையும் மாற்றி, "பைனல்ஸ் இவ்வளவு ஈஸியாக இருக்கும்னு ஸ்வனத்திலும் கண்டில்லா சாரே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தரமான பதிலடி.



Click it and Unblock the Notifications