For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Fairplay டேபிளில் எங்களுக்கு கடைசி இடம்.. அதற்கு நான்தான் காரணம்.. சிரித்து கொண்டே சொன்ன கம்பீர்!

அகமதாபாத் : விராட் கோலியை கட்டிப்பிடித்த பின் ஃபேர்பிளே டேபிளில் முதலிடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாக கேகேஆர் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் கேகேஆர் அணி முதலிடத்தில் நிறைவு செய்து அசத்தியுள்ளது. ஆனால் Fairplay டேபிளில் கேகேஆர் அணி கடைசி இடத்தில் நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து கேகேஆர் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

IPL 2024 KKR vs SRH Gautam Gambhir shares joke about Fairplay ward table and KKR position

நட்சத்திர வீரர் அஸ்வினுக்கு அளித்துள்ள பேட்டியில் கவுதம் கம்பீர் பேசுகையில், சின்னச்சாமி மைதானத்தில் விராட் கோலியுடன் நட்பு பாராட்டிய பின் ஃபேர்பிளே டேபிளில் முதலிடம் எங்களுக்கு தான் என்று நினைத்திருந்தேன். அதில் எந்த அணிக்கு இடையிலும் போட்டி இல்லை என்றாலும், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்ததை போல், ஃபேர்பிளே பட்டியலிலும் முதலிடத்தில் இருப்போம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நாங்கள் தான் கடைசி இடத்தில் உள்ளோம்.

யார் ஒரு நண்பர் எனக்கு 2 நாட்கள் முன்பு மெசேஜ் ஒன்றை அனுப்பியிருந்தார். கேகேஆர் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அங்கு தான் உள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும், ஃபேர்பிளேவில் கடைசி இடத்தில் உள்ளது. அதற்கென கோப்பை கொடுக்கிறார்களா என்ன? எனக்கு அதுதான் புரியவில்லை. கேகேஆர் அணியினர் நேர்மையாக விளையானார்கள். கடைசி 5 போட்டிகளில் நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை. ஆனாலும் 10வது இடத்தில் தான் உள்ளோம்.

அதற்கு காரணம், கேகேஆர் அணியின் டக் அவுட்டில் நான் இருப்பதே காரணம் என்று நினைக்கிறேன். பள்ளி நாட்களிலும் நான் கடைசி பெஞ்ச் மாணவராகவே இருந்துள்ளேன். அப்போது முதலே இது தொடர்ந்து வருகிறது. எந்த அணியுடன் நான் இருந்தாலும், ஃபேர்பிளேவில் கடைசி இடமே கிடைக்கிறது. கடந்த முறை லக்னோ அணியுடன் இருந்த போது நம்பர் 9 இருந்தோம். இம்முறை கடைசி இடத்தில் உள்ளோம் என்று கூறியுள்ளார்.

Story first published: Tuesday, May 21, 2024, 13:27 [IST]
Other articles published on May 21, 2024
English summary
IPL 2024 KKR vs SRH : Gautam Gambhir shares joke about Fairplay ward table and KKR position
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+