Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 : பால் ஆஃப் தி ஐபிஎல்.. இதுக்குதான் ரூ.24.75 கோடி.. ஸ்டார்க் செய்த மேஜிக்.. எப்படி நடந்தது?

சென்னை : ஐபிஎல் பைனலில் அபிஷேக் சர்மாவை வீழ்த்திய ஸ்டார்க்கின் பந்தை ரசிகர்கள் "பால் ஆஃப் தி ஐபிஎல்" என்று பாராட்டி வருகின்றனர்.

ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கேகேஆர் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த மிட்சல் ஸ்டார்க் 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 11 டாட் பால்கள் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் ராகுல் த்ரிப்பாட்டியின் விக்கெட்டை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது.

IPL 2024 KKR vs SRH Mitchell Starc bowled a Ball of the IPL to dismiss Abhishek Sharma in the IPL final 2024

இதன் காரணமாக மிட்சல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். இந்த நிலையில் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய ஸ்டார்க் பந்தை ரசிகர்கள் "பால் ஆஃப் தி ஐபிஎல்" என்று பாராட்டி வருகின்றனர். வழக்கமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் பேட்ஸ்மேன்களை செட் செய்து பவுலர்கள் வீழ்த்தி அசத்துவார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனை செட் செய்து மிட்சல் ஸ்டார்க் வீழ்த்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் ஓவரை வீசிய மிட்சல் ஸ்டார்க் அபிஷேக் சர்மாவுக்கு வீசிய முதல் 3 பந்துகளை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியிலேயே வீசி கொண்டிருந்தார். பிட்சில் ஸ்விங் இருந்ததால், அபிஷேக் சர்மா அதனை அடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தொடர்ந்து 4வது பந்தையும் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியிலேயே வீசியதால் அபிஷேக் சர்மா அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராக இருந்தார். இந்த நிலையில் 5வது பந்தை மிட்சல் ஸ்டார்க், மிடில் மற்றும் லெக் ஸ்டம்ப் லைனில் பிட்ச் செய்து ஸ்விங் செய்ய, அது நேராக ஆஃப் ஸ்டம்ப் மேல் இருந்த பைல்ஸை மட்டும் தூக்கி சென்றது.

ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று ரசிகர்கள் மிரண்டு போனார்கள். கிட்டத்தட்ட 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்கல்லத்தை வீழ்த்த ஸ்டார்க் எப்படியான பந்தை வீசினாரோ, அதேபோன்ற பந்தை தான் மீண்டும் வீசி இருந்தார். ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியின் அழுத்தம் அனைவருக்குமே இருந்த சூழலில், மிகவும் முக்கியமான போட்டியில் ஸ்டார்க் மிகச்சிறந்த பந்தை வீசி மேஜிக்கை நிகழ்த்தியுள்ளார்.

"cometh the man cometh the hour" என்று சொல்வார்கள். இதற்கு கடினமான சூழலிலும், கடினமான நேரத்திலும் வெல்லக் கூடிய மனிதன் என்று பொருள். மிட்சல் ஸ்டார்க் அப்படியான வீரர் என்று தொடர்ந்து நிரூபித்து வருகிறார். இதன் காரணமாக கேகேஆர் அணி ரூ.24.75 கோடி கொடுத்து மிட்சல் ஸ்டார்க்கை வாங்கியதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கேகேஆர் அணிக்காக லீக் போட்டிகளில் பெரிதாக சோபிக்காத மிட்சல் ஸ்டார்க், குவாலிஃபையர் 1 மற்றும் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 27, 2024, 12:11 [IST]
Other articles published on May 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+