கிங் ஆஃப் டெத் ஓவர்ஸ்.. ராஜஸ்தானை அலறவிட்ட நடராஜன்.. கலீல் அஹ்மத் இடத்தில் சேர்க்கப்படுவாரா?
சென்னை : ராஜஸ்தான் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் தமிழக வீரர் நடராஜனின் பவுலிங் பலராலும் வியக்கப்பட்டு வருகிறது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு ஸ்பின்னர்களான ஷாபாஸ் அஹ்மத் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் முக்கிய பங்காற்றினர். இதனையடுத்து விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரு வீரர்களுக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஐதராபாத் அணிக்காக ஆடி வரும் தமிழக வீரர் நடராஜனின் பவுலிங் செய்துள்ளார். 3 ஓவர்கள் வீசிய நடராஜன் வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 13 டாட் பால்கள் உட்பட ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் நடராஜன் 4வது இடத்தில் இருக்கிறார்.
மொத்தமாக 13 போட்டிகளில் விளையாடிய நடராஜன் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் நடராஜனின் எகனாமி ரேட் தான் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ராவுக்கு பின் சிறந்த எகனாமி ரேட்டை நடராஜன் தான் வைத்துள்ளார். இந்த சீசனில் 296 பந்துகளை வீசியுள்ள நடராஜன் 436 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார்.
அதேபோல் இந்த சீசனில் பவர் பிளேவில் ஒரு ஓவர்களும், டெத் ஓவர்களில் 2 ஓவர்களும், மிடில் ஓவர்களில் ஒரு ஓவரையும் நடராஜன் வீசி வருகிறார். எப்போதெல்லாம் விக்கெட்டுகள் தேவையோ அப்போதெல்லாம் கம்மின்ஸ் நடராஜனின் கைகளில் பந்தை கொடுத்து வருகிறார். இதனால் இன்னும் ஒரு போட்டியில் நடராஜன் விளையாடவுள்ளதால், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இதனால் நடராஜனை டி20 உலகக்கோப்பை தொடருக்கான ரிசர்வ் வீரர்கள் பட்டியலிலாவது சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் கலீல் அஹ்மத்தால் டெத் ஓவர்களில் பவுலிங் செய்ய முடியாது. பவர் பிளேவிலேயே அதிக ரன்களை விட்டுக் கொடுக்கும் கலீல், டெத் ஓவர்களில் வள்ளலாக மாறிவிடுவார். ஆனால் நடராஜன் போட்டியின் அனைத்து சூழல்களிலும் அசத்துகிறார்.


Click it and Unblock the Notifications