Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாயை பொத்திக்கிட்டு இருக்கணும்.. கடவுள் மேலே இருக்கான்.. ஆர்சிபி, கோலி ரசிகர்களை கதறவிட்ட ஸ்ரீகாந்த்

சென்னை : ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் ஆர்சிபி அணி தோற்றதின் மூலம் கடவுள் என்ற ஒருவன் மேலே இருக்கிறான் என்பது தெளிவாகிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் ஆர்சிபி அணி எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டது.

இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜஸ்தான் அபாரமாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி சென்றது. இதன் மூலம் 17வது முறையாக கோப்பையை வெல்வதற்காக களம் இறங்கிய ஆர்சிபி அணி எப்போதும் போல் வெறுங்கையோடு சென்று இருக்கிறது.

IPL 2024- Kris srikanth trashes RCB for their worst behaviours

இந்த நிலையில் லீக் சுற்று முடிவில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி விட்டு ஆர்சிபி ப்ளே ஆப்க்கு சென்றது. ஆனால் ஏதோ கோப்பையை வென்றது போல் அவர்கள் அடாவடித்தனம் செய்தார்கள். மேலும் விராட் கோலி மைதானத்தில் கத்திக் கொண்டே இருந்தது. சிஎஸ்கே ரசிகர்களை வெறுப்படைய செய்தது.

இந்த நிலையில் ஆர்சிபி அணி வெளியேறியது குறித்து youtube சேனலுக்கு பேட்டி அளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், ஆர்சிபி அணியை கதறவிட்டிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் கிரிக்கெட் விளையாடும் போது வாயை பொத்திக்கொண்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் இப்படித்தான் நடக்கும்.ஆண்டவன் என்ற ஒருவன் நிச்சயம் இருக்கின்றான்.

மேலும் ஆர்சிபி அணி தோற்றதிற்கு ட்ரெஸ்ஸிங் ரூமில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் தினமும் வீடியோவாக போடுவது தான் காரணம். வீட்டுக்குள் நடக்கும் விஷயத்தை எப்போதும் வெளியே சொல்ல கூடாது. ஆனால் கிரிக்கெட்டின் ட்ரெஸ்ஸிங் ரூமில் என்ன நடக்கிறது என்பதை வீடியோவாக போட்டால் நிச்சயம் நீங்கள் காலி ஆகி விடுவீர்கள்.

மேலும் வாழ்க்கையில் நீங்கள் ஏதேனும் ஒரு விஷயம் செய்கிறீர்கள் என்றால் தயவு செய்து வாயை மூடிக் கொண்டு உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வேறு எதுவும் பேசாதீர்கள்.ஆர் சி பி வீரர்கள் வாயை மூடிக் கொண்டு இருந்திருந்தால் இந்நேரம் சரியாக விளையாடி இருப்பார்கள். ஆனால் சிஎஸ்கேவை தோற்கடித்து விட்டு அவர்கள் வேண்டுமென்றே கொண்டாடினார்கள். இதற்கு அஸ்வின் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். ஏதோ தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப்க்கு வந்ததை ஆர்சிபி பெரிய சாதனை போல் கருதிக் கொண்டது.

சிஎஸ்கே, மும்பை அணி எல்லாம் எங்கேயோ இருந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று 5 முறை கோப்பையை வென்று இருக்கிறார்கள். ஆனால் பிளே ஆப் க்கு வந்ததே குதித்துக் கொண்டாடியது மிகவும் தவறு. ஈ சாலா கப் நம்தே என்று ஆர் சி பி ரசிகர்கள் 17 ஆண்டுகளாக சொல்லிக் கொள்கிறார்களே, தவிர ஒரு முறை கூட அவர்கள் கோப்பையை வென்றதில்லை. நாங்களும் விராட் கோலியின் ரசிகர்களாக தான் இருக்கின்றோம். நீங்கள் அமைதியாக இருந்திருந்தால் இந்நேரம் நீங்கள் வெற்றி பெற்று இருப்பீர்கள் என்று ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியிருக்கிறார்.

Story first published: Thursday, May 23, 2024, 18:20 [IST]
Other articles published on May 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+