Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க கேப்டனையே மிரட்டுறாங்க? விக்கெட்டுக்காக குல்தீப் செய்த காரியம்.. ரிஷப் பண்ட் பாவம்ங்க

ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிய ஆட்டம் ஒன்றில் ஒரு ருசிகரமான சம்பவம் நடைபெற்றது. கிரிக்கெட் வீரர்களுக்கு அதிகம் பணம் கிடைக்கும் இந்த தொடரில் ஒவ்வொரு வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் இருந்தால் ரன்கள் அடிக்க வேண்டும் என்றும் பவுலர்களாக இருந்தால் விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறார்கள். அப்படி விக்கெட் எடுப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தற்போது வீரர்கள் தயங்குவதில்லை.

IPL 2024 - Kuldeep Yadav try to convince Rishabh pant and did this for DRS

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது டெல்லி அணி வீரர் குல்தீப் யாதவ் செய்த காரியம் ஒன்றுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்து வீசிய டெல்லி அணியில் விரைவாக விக்கெட் எடுக்க வேண்டும் என்று கடுமையாக போராடியது.

அந்த வகையில் ஜெய்ஸ்வால் ஐந்து ரன்களில் வெளியேற கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து அதிரடி தொடக்க வீரர் ஜாஸ் பட்லரை விரைவில் ஆட்டம் இழக்க வைக்க வேண்டும் என டெல்லி வீரர்கள் முயற்சி செய்தனர். அப்போது குல்தீப், பட்லரின் காலில் பட்டது. இதற்கு நடுவர் நாட் அவுட் வழங்கி விட்டார்.

இதனால் 15 வினாடிகள் செல்வதற்குள் டெல்லி அணி டிஆர்எஸ் முடிவை நாட வேண்டும். ஆனால் குல்தீப் யாதவ் எவ்வளவு சொல்லியும் கேப்டன் ரிஷப் பன்ட் டிஆர்எஸ்ஐ எடுக்கவில்லை. இதனால் கடுப்பான குல்தீப் செல்லமாக பணை மிரட்டினார். அத்துடன் நிறுத்தாமல் ரிஷப் பண்டின் கையை எடுத்து அவரே டிஆர்எஸ் சிக்னலுக்கு கொடுத்தார்.

நல்லவேளையாக ரிப்ளேவில் இது அவுட் என தெரிய வந்தது. இதனால் குல்தீப் யாதவும், ரிஷப் பண்டும் பெருமூச்சு அடைந்தனர். ஒருவேளை இது நாட் அவுட் ஆகி இருந்தால் நிச்சயம் பண்ட், குல்தீப்பை ஓட ஓட அடித்திருப்பார். இந்த காட்சியை பதிவிட்டுள்ள ரசிகர்கள் டிஆர்எஸ் முடிவெடுப்பதற்காக கேப்டன்களை எல்லாம் மிரட்டும் அளவிற்கு தற்போது வீரர்கள் வந்து விட்டார்களே என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Thursday, March 28, 2024, 23:56 [IST]
Other articles published on Mar 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+