Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

151 கிமீ வேகத்தில் பந்துவீசிய மாயங் யாதவ்.. மேக்ஸ்வெல், கிரீன் என அடுத்தடுத்து அவுட்டான வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியில் இடம் பிடித்து இருக்கும் 21 வயதான வீரர் மாயங் யாதவ், தற்போது தன்னுடைய அதிவேக பந்துவீச்சால் ரசிகர்களை மிரள வைத்து வருகிறார். ஒரு காலத்தில் இந்தியாவை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார் என்று தெரிந்தால் அதனை அதிசயமாக அனைவரும் பார்ப்பார்கள்.

ஆனால் தற்போது இளம் வீரர்கள் பலரும் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துகளை வீசி அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் தற்போது மாயங் யாதவ் என்ற 21 வயது வீரர் 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துகளை வீசி தெறிக்கவிட்டு வருகிறார்.

IPL 2024 - LSG Bowler Mayank yadav shines in RB by picking 2 wickets

ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக களம் இறங்கியுள்ள மாயங் யாதவ், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி 27 ரன்கள் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் தன்னுடைய இரண்டாவது ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி உடன் அவர் பலப்பரீட்சை நடத்தினார்.

பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூர் ஆடுகளத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. மேலும் விராட் கோலி, டுபிளசிஸ், மேக்ஸ்வெல், கேமரன் கிரீன் போன்ற அதிரடி வீரர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள். இந்த பலம் வாய்ந்த பேட்டிங் அணிக்கு எதிராக மாயங் யாதவ் எவ்வாறு செயல்பட போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் என்ற இந்த நிலையில் தான் வீசிய முதல் ஓவரிலேயே மாயங், பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தார்.

மணிக்கு 151 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் தடுமாறினார். மாயங் யாதவ் வீசிய ஷார்ட் பால் ஒன்றை அடிக்க முற்பட்டு மேக்ஸ்வெல் டக்அவுட் ஆகி வெளியேறினார். இதை அடுத்து தான் வீசிய இரண்டாவது ஓவரில் மீண்டும் 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மீது வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் கேமரா கிரீன் கிளீன் போல்ட் ஆனார்.

இதே போன்று ரஜட் பட்டிதார் விக்கெட்டையும் மாயங் வீழ்த்தினார். இதன் மூலம் நான்கு ஓவர் வீசிய மாயங் யாதவ் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்களை கவர்ந்து வரும் மாயங் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, April 2, 2024, 23:24 [IST]
Other articles published on Apr 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+