Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போய்! உங்க வாழ்க்கையை பாருங்க.. லக்னோ அணி ரசிகர் செய்த தொந்தரவு.. ஜாண்டி ரூட்ஸ் பதிலால் சர்ச்சை

லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணி பயிற்சியாளர் ஜான்டி ரூட்ஸ்க்கும் ரசிகர் ஒருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் பல ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

இந்தியாவில் கிரிக்கெட்டை ஒரு மதமாகவே ரசிகர்கள் பாவித்து வருகின்றனர். இந்த நிலையில் லக்னோ அணியை பின் தொடரும் ரசிகர் ஒருவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் லக்னோ அணி தமது பதிவுக்கு பதில் சொல்லாத வரை தொடர்ந்து நான் பதிவிட்டு கொண்டே இருப்பேன் என்று அந்த ரசிகர் கூறியுள்ளார்.

IPL 2024 - LSG coach Jhonty Rhodes teaches a fan great lesson for wasting time

தொடர்ந்து பத்தாவது நாட்களாக அந்த ரசிகர் இவ்வாறு பதிவிட்ட போது ஜாண்டி ரூட்ஸ் அந்த ரசிகருக்கு வாழ்க்கையை பாருங்கள்! உங்கள் ஆதரவுக்கு நன்றி. அதை நாங்கள் மதிக்கின்றோம் என்று பதில் கூறியிருந்தார். ஆனால் ஜாண்டி ரூட்சின் இந்த பதிவு அந்த ரசிகர் மனதை பாதித்துவிட்டது. இது குறித்து அந்த ரசிகர் வெளியிட்டுள்ள பதிவில் நான் லக்னோ அணியை பின்தொடர்கிறேன்.

நான் யாரையும் கேலி செய்யவில்லை. என்னுடைய ஆதரவு லக்னோ அணிக்கு தான் இருந்தது. ஆனால் அந்த அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஜான்டி ரூட்ஸ் என்னை வேலையில்லாதவர் என்று சொல்லிவிட்டார். இனி நான் அந்த அணிக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு மீண்டும் பதில் அளித்துள்ள ஜாண்டி ரூட்ஸ்,நான் எப்போது உங்களை வேலை இல்லாமல் இருக்கிறீர்கள் என்று சொன்னேன். தேவையில்லாமல் என் பெயரை இழுக்காதீர்கள். நான் நேர்மையான பதிலை தான் உங்களுக்கு கூறினேன். தற்போது என்னுடைய ஓய்வு நேரத்தில் கூட ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து அவர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றேன்.

இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு தண்டனை வாங்கி தர ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் ஆகும் நிலை இருக்கிறது. நான் அவர்களுடன் நேரத்தை செலவிட்ட போது என்னிடம் அவர்கள் எதையுமே கேட்கவில்லை. அவர்கள் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய நினைக்கிறார்கள். அதை தான் நான் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய பதிவு உங்களை காயப்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன் என்று ஜான்டீ ரூட்ஸ் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, April 10, 2024, 18:21 [IST]
Other articles published on Apr 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+