லக்னோ : சிஎஸ்கே - லக்னோ இடையிலான போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.

கில்லி படத்தில் மயில்சாமி கதாபாத்திரத்திடம் ஒருவர், கேப்டன் வேலு இல்லை.. அதனால் கில்லி அணியில் ரெய்டு போக ஆளில்லை என்று கூறுவார். அதற்கு மயில்சாமி, "வேலு இல்லைனா கேம்ல ஒரு கிக்கே இருக்காதே" என்பார். அதனை அப்படியே மாற்றி ரச்சின் ரவீந்திரா டக் அவுட்டானதை கிண்டல் செய்யும் வகையில், "கன்சிஸ்டண்ட் கான்வே இல்லை.. ஓபனிங்கில் ஒரு கிக்கே இல்லை" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நக்கல் ரகம்.

லியோ படத்தில் சாக்லேட் காபி கேட்கும் சாண்டி மாஸ்டருக்கு, சாக்லேட் காபியை வைத்து விஜய் வாயை உடைப்பார். அடி வாங்கி நிலையில் அமர்ந்திருக்கும் சாண்டி மாஸ்டரை பார்த்து மிஷ்கின், "சாக்லேட் காபி" என்று கேட்கும் காட்சி அதிரி புரிதி காமெடியாக இருக்கும். அதுபோல் நேற்றைய ஆட்டத்தில் தோனிக்காக ரவி பிஷ்னாய்-க்கு ஒரு ஓவரை மட்டும் கேஎல் ராகுல் மீதம் வைத்திருப்பார். ஒரு கட்டத்தில் 18வது ஓவரை வீச பிஷ்னாய் வருவார். அந்த ஓவரில் மொயின் அலி ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்துவார். இதனை அப்படியே லியோ காட்சியுடன் ஒப்பிட்டு லக்னோ அணி ரசிகர்கள் கேஎல் ராகுலிடம், "டெத் ஓவர்ஸ்ல ஸ்பின்னரு" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் உச்சக்கட்ட காமெடி.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில், "இந்த ராகிங்னா என்ன.." என்று கமல்ஹாசன் கேட்க, அதற்கு சீனியர்கள், "ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரையும் இப்படி டான்ஸ் ஆட வைக்கிறது" என்று கூறுவார்கள். அதற்கு கமல், "நல்லாருக்குதே இது.. என்னையும் ராகிங் பண்ணுங்க" என்று வேண்டுமென்றே மிரட்டுவார். டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி ரேசில் உள்ள தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் உள்ளிட்ட சீனியர் வீரர்களான இவர்களுடன் வசூல்ராஜா கமல்ஹாசன் ஸ்டைலில் சூப்பர் சீனியரான தோனி, "நல்லாருக்குதே இது.. நானும் வரவா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ்.

சிஎஸ்கே அணிக்காக ரூ.14 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட டேரல் மிட்சல், அனைத்து போட்டிகளில் விளையாடியும் குறிப்பிடும் வகையில் எந்த ஆட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை. இதனால் மிட்சலை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மொயின் அலியை களமிறக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப லக்னோ அணி ஆட்டத்தில் ருதுராஜ், மிட்சலுக்கு பதிலாக மொயின் அலியை கொண்டு வந்தார். இதனை ஐயா படத்தில் சரத் குமாரை பார்த்து நன்றி சொல்லும் வடிவேலுவை போல், ருதுராஜிற்கு சிஎஸ்கே ஃபேன்ஸ் நன்றி சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒரு வழியாக நடந்துருச்சி ரகம்.

இந்த சீசனில் இதுவரை 5 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள தோனி ஒருமுறை கூட ஆட்டமிழக்கவில்லை. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் வந்த தோனி 9 பந்துகளில் 28 ரன்களை விளாசினார். மங்காத்தா படத்தில் அஜித் குமாரின் பேச்சை கேட்ட வைபவ், "தல டக்கர் டோய்" என்பார். அதுபோல் தோனியை ஃபார்மை பார்த்து சிஎஸ்கே ரசிகர்கள், "தல டக்கர் டோய்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.