லக்னோ : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது. லக்னோ மைதானம் சுழலுக்கு கொஞ்சம் சாதகமாக இருக்கும் என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

லக்னோ அணி தரப்பில் ஒரு மாற்றமும், சிஎஸ்கே அணி தரப்பில் 2 மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பேசுகையில், நல்ல பேட்டிங் பிட்சாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஈரப்பதம் பற்றி பெரியளவில் கவலை கொள்ளவில்லை. ஏனென்றால் 40 ஓவர்களும் நிச்சயம் இருக்கும் என்று நினைக்கிறேன். எங்களுக்கு எந்த இலக்கை சேஸிங் செய்கிறோம் என்று தெரிய வேண்டும்.
இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பெரிதாக எந்த தவறும் செய்யவில்லை என்று நினைக்கிறேன். கேகேஆர் அணிக்கு எதிராக பெரிய தோல்வியை சந்தித்தோம். ஆனால் கவலை கொள்ளவில்லை. தலைமை பொறுப்பில் இருக்கும் போது நாம் பரபரப்பாக உணர்ந்தால், அது அடுத்தவருக்கும் தொற்றிக் கொள்ளும். அது எனக்கு சரியாக இருக்காது. லக்னோ அணியில் ஷமார் ஜோசப் நீக்கப்பட்டு, ஹென்ரி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசுகையில், நாங்களும் பவுலிங் செய்யவே விரும்பினோம். கடந்த போட்டியில் பேட்டிங் செய்தோம். அது நம்பிக்கையளிக்கிறது. வான்கடேவில் முதல் பேட்டிங் செய்து அந்த அணிக்கு எதிராக டிஃபெண்ட் செய்தது மன உறுதியை அதிகரித்துள்ளது. சிஎஸ்கே அணியில் டேரல் மிட்சல், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நீக்கப்பட்டு தீபக் சஹர் மற்றும் மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிஎஸ்கே பிளேயிங் லெவன் : ருதுராஜ், ரச்சின், ரஹானே, மொயின் அலி, சிவம் துபே, ஜடேஜா, தோனி, தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசுர் ரஹ்மான், பதிரானா
லக்னோ பிளேயிங் லெவன் : டி காக், கேஎல் ராகுல், ஸ்டாய்னிஸ், ஹூடா, பூரன், பதோனி, க்ருனால் பாண்டியா, ஹென்ரி, பிஷ்னாய், மோசின் கான், யாஷ் தாக்கூர்