For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?

லக்னோ : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி செய்த தவறுகளே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய லக்னோ அணி 19 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

IPL 2024 LSG vs CSK Match What is the reason for the loss of CSK against LSG at Lucknow Stadium

இந்த சீசனில் சிஎஸ்கே அணி பெறும் 3வது தோல்வி இதுவாகும். இந்த தோல்விக்கு சிஎஸ்கே அணியின் தவறுகளே காரணமாக அமைந்துள்ளது. பேட்டிங்கின் போது பவர் பிளே ஓவர்களிலேயே ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் பவர் பிளே ஓவர்களில் நல்ல ரன்கள் சேர்த்த போதும், விக்கெட்டை காப்பாற்ற வேண்டி ஜடேஜாவை நம்பர் 4ல் களமிறக்க வேண்டிய தேவை எழுந்தது.

அதேபோல் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்காமல் ரஹானேவை களமிறக்குவது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. இதனால் முதல் 7 ஓவர்களுக்குள் கட்டாயம் சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகளை இழக்கும் என்று முன்பே தெரிந்துவிடுகிறது. அதேபோல் ஒவ்வொரு அணியும் சிவம் துபேவுக்கு எதிராக கொஞ்சம் தயாராகி வருவதால், எதிர்முனையில் நின்று அட்டாக் செய்யும் மற்றொரு வீரரின் தேவை எழுந்துள்ளது.

அதனை சில நேரங்களில் ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே செய்கிறார். அதேபோல் நேற்றைய ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை சிஎஸ்கே அணி இழந்த போது, உடனடியாக தோனியை களமிறக்காமல் இம்பேக்ட் பிளேயராக சமீர் ரிஸ்வியை களமிறக்கியது மிகப்பெரிய பின்னடைவாக மாறியது. இதனால் பவுலிங்கிலும் ஷர்துல் தாக்கூரை களமிறக்க முடியவில்லை.

கிட்டத்தட்ட சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டரே ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் பவுலிங்கில் தீபக் சஹரால் விக்கெட் வீழ்த்த முடியாத போது, பதிரானாவை பவர் பிளேவில் ஒரு ஓவரையாவது வீச வைத்திருக்க வேண்டும். தொடர்ச்சியாக பவர் பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் சிஎஸ்கே அணி திணறி வருவதை கவனிக்கவில்லை என்றால், சேப்பாக்கம் மைதானத்திலேயே தோல்வியை சந்திக்க நேரிடும்.

Story first published: Saturday, April 20, 2024, 8:12 [IST]
Other articles published on Apr 20, 2024
English summary
IPL 2024 LSG vs CSK Match : what is the reason for the loss of CSK against LSG at Lucknow Stadium
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+