Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவில் இருந்து சின்னப் பையனை கூட்டி வந்து அடிக்க விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. லக்னோ படுதோல்வி

லக்னோ : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 167 ரன்கள் சேர்த்தது. அந்த அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து மோசமான நிலையில் இருந்தது. பின்னர் 167 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டி இருந்தது.

IPL 2024 LSG vs DC Result Jake Fraser Rishabh Pant finish the chase against LSG


ஆனால், அடுத்து பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி ஆஸ்திரேலிய உள்ளூர் பேட்ஸ்மேனான ஜேக் ஃபிரேசர் என்ற 22 வயது இளம் வீரரை களமிறக்கி சேஸிங்கை வேகமாக முடித்தது. ரிஷப் பண்ட்டும் அதிரடி ஆட்டம் ஆடி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

லக்னோ அணியின் பேட்டிங்கில் க்விண்டன் டி காக் 19, கே எல் ராகுல் 39, தேவ்டத் படிக்கல் 3, மார்கஸ் ஸ்டோனிஸ் 8, நிக்கோலஸ் பூரன் 0, தீபக் ஹூடா 10, க்ருனால் பாண்டியா 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 94 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது அந்த அணி.

மிக மோசமான இந்த பேட்டிங் சரிவை அடுத்து ஆயுஷ் பதோனி - அர்சத் கான் எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் கடைசி 7 ஓவர்கள் முழுவதும் நின்று பேட்டிங் செய்து கூட்டணியாக 73 ரன்கள் சேர்த்தனர். பதோனி 35 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். கலீல் அஹ்மத் 2 விக்கெட்களும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். குல்தீப் 9 பந்துகளில் 3 விக்கெட்கள் வீழ்த்தியது போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.

அடுத்து டெல்லி அணி சேஸிங்கில் எங்காவது தவறு செய்யும் என எதிர்பார்த்தது லக்னோ அணி. ஆனால், துவக்க வீரர் டேவிட் வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்த பின் களத்துக்கு வந்த இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஜேக் ஃபிரேசர் தனது முதல் ஐபிஎல் போட்டியில் இரண்டாவது பந்திலேயே சிக்ஸ் அடித்து தெறிக்க விட்டார்.

உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்து இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃபிரேசர், லுங்கி நிகிடிக்கு பதில் மாற்று வீரராக டெல்லி அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் 35 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பண்ட் 24 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். 18.1 ஓவர்களில் எல்லாம் டெல்லி அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Friday, April 12, 2024, 23:44 [IST]
Other articles published on Apr 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+