Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த 2 பேரையும் இந்திய அணியில் எடுத்துராதீங்க.. டி20 அணிக்கு ஆப்பு வைக்கப் போவதே இவங்கதான்

லக்னோ : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 2024 ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுல் ஆமைக்கே டஃப் கொடுக்கும் வகையில் நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். ராகுல் எப்போதும் இப்படிதான் என மனதை தேற்றிக் கொண்டாலும் அடுத்து குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் ஆடிய ஆட்டம் அதற்கும் மேல் இருந்தது.

இந்தப் போட்டியில் முதல் 20 பந்துகள் வரை 120 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய ராகுல் அதன் பின் 21வது பந்தில் இருந்து அவுட் ஆகும் வரை 82 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் சேர்த்தார். துவக்க வீரராக களமிறங்கிய ராகுல் 31 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து பவர் பிளேவை வீணாக்கியதோடு அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் தலையில் ரன் குவிக்கும் பொறுப்பை தூக்கி வைத்து அழுத்தம் கொடுத்தார்.

IPL 2024 LSG vs GT KL Rahul played a slow innings as LSG scored 163 runs

இந்தப் போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் க்விண்டன் டி காக் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான கே எல் ராகுல் நிதான ஆட்டம் ஆடி 31 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 7 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின் லக்னோ அணியை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீட்டனர். நான்காம் வரிசையில் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 43 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். நிக்கோலஸ் பூரன் 22 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். ஆயுஷ் பதோனி 11 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து லக்னோ அணி சரிவில் இருந்து மீண்டு 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் இருந்து 150 பந்துகளை சந்தித்த பேட்ஸ்மேன்களிலேயே கே எல் ராகுல் மட்டுமே 120க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். 2023 ஐபிஎல் தொடரில் இருந்து 13 இன்னிங்க்ஸ்களில் ஆடி உள்ள கே எல் ராகுல் 400 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 33.33 ஆகும். டி20 போட்டிகளை பொறுத்தவரை இது நல்ல பேட்டிங் சராசரி ஆனால், அவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 117 மட்டுமே. இது படுமோசமான ஸ்ட்ரைக் ரேட் ஆகும். கே எல் ராகுல் டி20 போட்டிகளை விட்டு விலக வேண்டும் என்பதை கூறும் வகையில் உள்ளது அவரது ஸ்ட்ரைக் ரேட்.

அடுத்து குஜராத் அணி சேஸிங் செய்த போது சுப்மன் கில் 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கும் கே எல் ராகுல் மற்றும் சுப்மன் கில், ஐபிஎல் தொடரில் ஆமை வேகத்தில் ஆடி வருகின்றனர். அவர்களை நிச்சயமாக இந்திய டி20 அணியில் தேர்வு செய்யாமல் இருப்பதே நல்லது.

Story first published: Sunday, April 7, 2024, 21:36 [IST]
Other articles published on Apr 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+