Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உனக்கு மனசாட்சியே இல்லையா.. கதறிய லக்னோ.. 17 பவுண்டரி அடித்து வெறியாட்டம் ஆடிய இங்கிலாந்து வீரர்

கொல்கத்தா : 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயித்த 162 ரன்கள் வெற்றி இலக்கை 15.4 ஓவர்களில் எல்லாம் எட்டி பெரிய வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் துவக்க வீரர் பில் சால்ட் தனது அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணியை கதற விட்டார். அவர் 14 ஃபோர், 3 சிக்ஸ் என மொத்தம் 17 பவுண்டரி அடித்து போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பக்கம் கொண்டு சென்றார்.

IPL 2024 LSG vs KKR result Phil Salt hit 17 boundaries and make KKR win the match

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் கே எல் ராகுல் 27 பந்துகளில் 39 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 32 பந்துகளில் 45 ரன்கள் அடித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். ஆயுஷ் பதோனி 29 ரன்கள் சேர்த்தாலும் 27 பந்துகள் எடுத்துக் கொண்டார். அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது.

அடுத்து கொல்கத்தா அணி சேஸிங் செய்தது. சுனில் நரைன் 6 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரகுவன்ஷி 7 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் காட்டினார். அதன் பின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக பேட்டிங் ஆடி விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினார்.

மறுபுறம் வெறியாட்டம் ஆடிய பில் சால்ட் 47 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். 14 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 189 ஆக இருந்தது. பில் சால்ட் விக்கெட்டை வீழ்த்த லக்னோ அணி தொடர்ந்து முயற்சி செய்தும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 38 பந்துகளில் 38 ரன்கள் குவித்து இருந்தார். 15.4 ஓவர்களில் எல்லாம் 162 ரன்கள் வெற்றி இலக்கை எட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.இந்த வெற்றி மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று இருக்கிறது.

Story first published: Sunday, April 14, 2024, 19:47 [IST]
Other articles published on Apr 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+