Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த அவமானம் தேவையா.. கோலி டீமை தவிர எல்லாரும் உருப்படியா ஆடுறாங்க.. சரமாரியாக விளாசிய ரசிகர்கள்

லக்னோ : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும், விராட் கோலியையும் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

லக்னோ அணி வெற்றி பெற்றதற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கிண்டல் செய்யக் காரணம் சொந்த மைதானத்தில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது தான். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த 11 போட்டிகளில் சொந்த மைதானத்தில் ஆடிய அணிகள் 10 போட்டிகளில் வென்றுள்ளன.

IPL 2024 LSG vs PBKS Fans mock RCB for only team to lose in home ground

லக்னோவில் நடைபெற்ற போட்டியில் தான் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. ஆனால், ஒரே ஒரு அணி அணி மட்டும் சொந்த மைதானத்தில் நடந்த போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது. அது தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அணி தோல்வி அடைந்தது. இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால் 2015இல் இருந்து பெங்களூரில் நடைபெறும் போட்டிகளில் கொல்கத்தா அணி மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் கொல்கத்தா அணியை வீழ்த்தவே முடியவில்லை. அந்த மோசமான சாதனை இந்த ஆண்டும் தொடர்ந்தது.

ஏற்கனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை என்பது கேலிக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. தற்போது 2024 ஐபிஎல் தொடரில் மற்ற அணிகள் எல்லாம் சொந்த மைதானத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெற்று வரும் நிலையில் அதையும் செய்ய முடியாமல் தவித்து வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. லக்னோ அணியின் வெற்றியை அடுத்து 16 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும், அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியையும் மீம்ஸ் வெளியிட்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

Story first published: Sunday, March 31, 2024, 6:37 [IST]
Other articles published on Mar 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+