Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற போது, முதல் பந்தை வீசும் முன் தோனியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதாகவும், தோனியும் கையை காட்டி வாழ்த்தி அவரை ஆசிர்வதித்ததாகவும் ஒரு வீடியோ ரசிகர்கள் மத்தியில் பரவி வந்தது. ஆனால், உண்மையில் அங்கு நடந்ததே வேறு என தற்போது தெரிய வந்துள்ளது.

2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டியில் பதிரானா பங்கேற்கவில்லை. அவர் காயத்தில் இருந்து மீண்டு ஓய்வில் இருந்தார். சிஎஸ்கே அணியின் இரண்டாவது போட்டியில் பதிரானா வாய்ப்பு பெற்றார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் பதிரானா முதலில் பந்து வீசும் முன் தோனி காலில் விழுந்ததாக ஒரு வீடியோ வெளியானது.

IPL 2024 Matheesha Pathirana didn t take blessings from MS Dhoni

அந்த வீடியோவில் காட்சிகள் தெளிவாக இல்லை. அதில் பதிரானா தோனி காலில் விழுவது போலவும், தோனி அவரை ஆசிர்வதிப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. ஆனால், தற்போது அதற்கு நேர் எதிர்பக்கம் இருந்து படம் பிடிக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் பந்து வீசும் முன் தோனி பதிரானாவிடம் பேசுகிறார். அப்போது பந்து வீச ஓடி வரத் துவங்கும் இடத்தை குறிக்க வெள்ளை நிற குறியீட்டு அட்டை ஒன்றை கீழே இருந்து எடுக்கிறார் பதிரானா. அதே சமயம், தோனி தூரத்தில் ஒரு ஃபீல்டரை பார்த்து நகர்ந்து செல்லுமாறு கைகளை அசைக்கிறார்.

இதை வேறு திசையில் இருந்து படம் பிடிக்கப்பட்ட வீடியோவில் பார்க்கும் போது பதிரானா தோனி காலில் விழுவது போல உள்ளது. ஆனால், அவர் அந்த குறியீட்டு அட்டையை தான் எடுக்கிறார். அதே போல தோனி ஃபீல்டரை நகர்ந்து நிற்க சொல்வதை பார்க்க அவர் ஆசிர்வாதம் செய்வது போல உள்ளது. இந்த உண்மை தெரியாமல் தோனி ரசிகர்கள் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Story first published: Friday, March 29, 2024, 17:47 [IST]
Other articles published on Mar 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+