Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித்துக்கு மட்டுமல்ல சச்சின் மகனுக்கும் ஆப்பு அடித்த ஹர்திக் பாண்டியா..ஒரு முறை கூட வாய்ப்பு இல்லை

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஹர்திக் பாண்டியா வாய்ப்பு தராதது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

கிரிக்கெட் ஜாம்பவானும், மும்பை இந்தியன்ஸ் அணியின் மென்டருமான சச்சின் டெண்டுல்கர் உடைய மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்த அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த சீசனில் பல போட்டிகளில் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்தார்.

IPL 2024 - MI Captain Hardik Pandya didnt give chace to sachin son arjun tendulkar

அர்ஜுன் டெண்டுல்கரின் பந்துவீச்சு நன்றாக இருந்தாலும் அவருடைய வேகம் மட்டும் ஒரு குறையாக இருந்தது. இந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர், தன்னுடைய வேகத்தை கூட்டிக் கொண்டது மட்டுமல்லாமல் பேட்டிங்களும் கவனம் செலுத்தி ரன்களை சேர்த்து வருகிறார். கடைசியாக அவர் குஜராத் அணிக்கு எதிராக கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.

மேலும் பேட்டிங்கில் 45 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 14 ரன்கள் சேர்த்தார். இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அர்ஜுன் டெண்டுல்கர் மெருகேறி இருக்கும் நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் அவருக்கு ஒரு முறை கூட ஹர்திக் பாண்டியா வாய்ப்பு வழங்கவில்லை. இதற்கு ஹர்திக் பாண்டியாவின் ஈகோ தான் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அடித்தட்டில் இருந்து வந்து படிப்படியாக ஹர்திக் பாண்டியா ஒரு ஆல் ரவுண்டராக உயர்ந்த நிலையில், சச்சின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அர்ஜுன் டெண்டுல்டருக்கு வாய்ப்பு வழங்க அவர் முன் வரவில்லை. சச்சினின் மகன் என்பதையும், மீறி அர்ஜுனை பெஞ்சில் அமர வைத்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் நமன் தீர் மற்றும் அன்சூல் காம்போஜ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்.

ஹர்திக் பாண்டியாவின் இந்த செயலுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பி இருக்கிறது. ஒரு சிலர் அர்ஜுனனின் தனிப்பட்ட திறமையை பார்த்தாவது அணியில் ஒரு போட்டியில் ஆவது வாய்ப்பு வழங்கி இருக்கலாம் என்று அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Tuesday, May 7, 2024, 7:30 [IST]
Other articles published on May 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+