Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீன் போட்றதுல எந்த குறைச்சலும் இல்ல.. வெறும் பனியன் உடன் விமான நிலையம் சென்ற ஹர்திக் பாண்டியா

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையில் கடுமையாக தடுமாறி வருகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார்கள்.

ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சியே மும்பை அணியின் இந்த நிலைக்கு காரணம் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். சிஎஸ்கேவுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடிக்கவிட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

IPL 2024 - MI Captain Hardik Pandya went to airport with Inner Baniyan

மேலும் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பவுலர்களுக்கு தவறான முறையில் பந்துகளை மாற்றி வழங்கியதாகவும் குற்றச்சாட்டு இருந்துள்ளது. மேலும் குஜராத் அணியில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவுக்கும் தற்போது கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

மேலும் ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆக வந்ததை மும்பை அணி ரசிகர்களும் விரும்பவில்லை. அதனால் அவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தமது மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் தொடர்ந்து நடந்து கொள்கிறார்.

எப்போதுமே ஹர்திக் பாண்டியா டாஸ் வீசும் போது பொய்யாக சிரிக்கிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் ஹர்திக் மானத்தை வாங்கி விட்டார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி இக்கட்டான நிலையில் உள்ளது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நாளை மறுநாள் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மொகாலி செல்கிறது.

அப்போது விமான நிலையம் வந்த ஹர்திக் பாண்டியா, வெறும் பனியன் உடன் வந்து இறங்கி விமான நிலையத்திற்குள் சென்றார். இதை பார்த்தவுடன் ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். சாதாரண மனிதர்கள் இதுபோல் பனியன் உடன் வெளியே செல்ல முடியுமா? விமான நிலையத்திற்கு போக முடியுமா? ஆனால் இதுபோல் பிரபலங்கள் மட்டும் எவ்வாறு இது போல் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் பேஷன் என்ற பெயரில் ஹர்திக் பாண்டியா செய்து வருவது மோசமான ஒன்று என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Tuesday, April 16, 2024, 19:47 [IST]
Other articles published on Apr 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+