MI vs CSK : கும்தலக்கடி கும்மாவா.. சிஎஸ்கேனா சும்மாவா.. சோசியல் மீடியாவை மிரள வைக்கும் தோனி மீம்ஸ்!
மும்பை : மும்பை - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியின் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
சார்பட்டா பரம்பரை படத்தில் ராமனை சண்டைக்கு அழைக்கும் கபிலன், யாரும் எதிர்பார்க்காத வகையில் நாக் அவுட் செய்துவிடுவார். இதனை கொஞ்சம் தூரத்தில் இருந்து பார்க்கும் ரங்கன் வாத்தியார், ஒரு நிமிடம் எட்டிப்பார்த்து மிரண்டே போவார். அதுபோல் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியின் ஆகாஷ் மத்வால் வீசிய பந்தில் ருதுராஜ் கெய்க்வாட்ஆஃப் சைடில் சிக்ஸ் அடித்து அசத்தினார். இதனை ஓய்வறையில் இருந்து தோனி பார்த்து வியந்து போனார். இதனால் ஆர்யாவாக ருதுராஜையும், ரங்கன் வாத்தியாராக தோனியையும் வைத்து உருவாக்கிய மீம் வெறித்தனம்.

நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி, 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட 20 ரன்களை விளாசினார். வான்கடே மைதானத்தில் தோனி சிக்ஸ் அடித்த அசத்தியது, 2011 உலகக்கோப்பையை நினைவுப்படுத்தியது. இதன் இரு படங்களையும் இணைத்து, "Once upon a time, There lived a ghost.. Its not a myth anymore" என்று சொல்லும் போது கமல் முகத்தை காட்டும் காட்சியுடன் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் நாயகன் மீண்டும் வரான் மொமண்ட்.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தை கொலை செய்ய வரும் ரவுடி ஒருவர், அவரின் மருமகள் பற்றி தவறான கமெண்ட் அடிப்பார். அதற்கு பின் கோபத்தில் கத்தியை எடுக்கும் ரஜினி, ஒரே சீவில் ஒருவரின் தலையை எடுத்துவிடுவார். அதன்பின் மற்றொரு ரவுடி பீதியில் உறைந்துவிடுவார். அப்போது ரஜினி, "என் மருமகள் பற்றி ஏதோ சொன்னியே" என்று கேட்பார். அதுபோல் தோனி வலைப்பயிற்சியில் மட்டும் தான் சிக்ஸ் அடிப்பார் என்று ஹேட்டர்ஸ் கிண்டல் செய்து வந்தனர். இதன்பின் கடைசி ஓவரில் வந்து தோனி ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க உடன், ரஜினி ஸ்டைலில் தோனி, "ஏதோ நெட்ஸில் மட்டும் தான் சிக்ஸ் அடிப்பேன்னு ஏதோ சொன்னியாமே" என்று ஹேட்டர்ஸை பார்த்து கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் உங்கப்பன் விசிலை கேட்டவன் மொமண்ட்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிகர் இளவரசு, லாரன்ஸ் நடித்த திரைப்படத்தை ஆளுங்கட்சியை எதிர்த்து திரையிடுவார். எதைப் பற்றியும் கவலையின்றி ரசிகர்களுடன் அமர்ந்து திரையரங்கில் அந்த படத்தை பார்க்கும் இளவரசு, "For My Boy.. Ceaser" என்று கூறுவார். அதுபோல் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் வந்த தோனி, 4 பந்துகளில் 6, 6, 6, 2 என்று 20 ரன்களை விளாசினார். இதன்பின் இளவரசுவாக தோனியை மாற்றி, "For My Fans" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கூஸ்பம்ப்.

சென்னை 28 படத்தில் கடைசி நேரத்தில் விளையாட்டில் சேர்க்கப்பட்டிருந்த ஒரு வீரர் நேரத்திற்கு வந்திருக்க மாட்டார். அப்போது பிரேம்ஜி எழுந்து சென்று இளவரசுவை பார்த்து, "ஜெர்ஸி போட்டுட்டு வந்து மேட்ச் ஆடுங்க.. வாங்க" என்று கிண்டலாக அழைப்பார். அதுபோல் இந்திய ரசிகர்கள் தோனியை, "ஓய்வை கேன்சல் செய்துவிட்டு டி20 உலகக்கோப்பைக்கு ஆட வாங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.



Click it and Unblock the Notifications