For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இளம் பவுலரை நம்பவில்லை.. பேட்டிங், பவுலிங், கேப்டன்சியிலும் வேஸ்ட்.. மும்பையை தோற்கடித்த ஹர்திக்!

மும்பை : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவே காரணமாக அமைந்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை சந்தித்துள்ளது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகவே சிஎஸ்கே அணியிடம் தோல்வியடைய மும்பை அணி நிர்வாகம் விரும்பாது.

IPL 2024 MI vs CSK Match Hardik Pandya failed in batting bowling and Captaincy in the match against CSK at Wankhede stadium

அதன் காரணமாகவெ மற்ற அணிகளை விடவும் சிஎஸ்கே அணியை வெல்ல வேண்டும் என்பதில் மும்பை அணி நிர்வாகிகளும் தீவிரமாக இருப்பார்கள். கடந்த 3 சீசன்களில் சிஎஸ்கே அணி 2 முறை கோப்பையை வென்றதன் காரணமாகவே, மும்பை அணியின் கேப்டன்சியில் இந்த சீசனில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவே மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். குறிப்பாக எதிர்முனையில் நின்று ரோகித் சர்மா அதிரடியில் பொளந்து கட்டிய நிலையில், ஹர்திக் பாண்டியா எளிதாக விக்கெட்டை கொடுத்து வெளியேறினார். அதேபோல் பவுலிங்கிலும் 3 ஓவர்களை வீசிய ஹர்திக் பாண்டியா 43 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

மும்பை அணி வென்ற 2 போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா ஒரு ஓவர் கூட வீசவில்லை. இந்த போட்டியில் ஆகாஷ் மத்வால் 15வது ஓவரில் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனாலே டெத் ஓவர்களில் ஆகாஷ் மத்வாலை நம்பாத ஹர்திக் பாண்டியா, நேரடியாக பந்தை எடுத்து கடைசி ஓவரை வீசி வந்தார். அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் விளாசப்பட்டது.

ஏற்கனவே சிவம் துபே வந்ததால் முகமது நபி மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் இருவரும் 4 ஓவர்களுடன் ஹர்திக் பாண்டியா நிறுத்தினார். ஸ்ரேயாஸ் கோபாலுக்கு இன்னும் ஒரு ஓவர் கொடுத்து முயற்சி கூட செய்யவில்லை. இளம் வீரர்களான ஆகாஷ் மத்வால், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோரை நம்பாமல் கடைசி ஓவரை வீச வந்ததே மும்பை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

இதனால் மும்பை அணி சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணியிடம் பரிதாபமாக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த சீசனில் மும்பை அணி பெறும் 4வது தோல்வி இதுவாகும். இதனால் புள்ளிப்பட்டியலில் 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மும்பை ரசிகர்கள் பலரும் ஹர்திக் பாண்டியாவை பொளந்து கட்டி வருகின்றனர்.

Story first published: Monday, April 15, 2024, 6:58 [IST]
Other articles published on Apr 15, 2024
English summary
IPL 2024 MI vs CSK Match : Hardik Pandya failed in batting, bowling and Captaincy in the match against CSK at Wankhede stadium
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+