Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொமாரியோ vs டெல்லி.. வெற்றிக்கு அந்த ஒரு ஓவரே காரணம்.. பும்ரா குறித்து பேசாமல் தவிர்த்த பாண்டியா!

மும்பை : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற கடைசி ஓவரில் ரொமாரியோ ஷெப்பர்ட் அடித்த 32 ரன்களே முக்கிய காரணம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

17வது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்று மும்பை அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் அதிரடியாக ஆடிய ரொமாரியோ ஷெப்பர்ட் 32 ரன்களை விளாசி பிரமிக்க வைத்தார்.

IPL 2024 MI vs DC Hardik Pandya didn t even mentioned Bumrah s spell against DC after the win

இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலமாக மும்பை அணி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. அதேபோல் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், இந்த வெற்றிக்கு பின் நிறைய கடின உழைப்பு உள்ளது. எங்கள் மனதில் இருந்து தோல்விகளை மறந்து, வெற்றிபெற நம்பிக்கை வைத்துள்ளோம். அதேபோல் திட்டங்களை சரியாக செய்து சரியான பிளேயிங் 12ஐ கண்டுபிடித்துள்ளோம். எப்போது அணியின் காம்பினேஷனை அறிவது முக்கியம். கடந்த சில நாட்களாக ஓய்வறையில் ஏராளமான அன்பு சூழ்ந்திருந்தது. தோல்விக்கு பின்னரும் நம்பிக்கையான வார்த்தைகளை கேட்க முடிந்தது.

நாங்கள் அனைவரும் ஒரு வெற்றி பெற்றால், அடுத்தடுத்து வெற்றிபெறுவோம் என்று நம்பினோம். இன்றைய ஆட்டத்தில் தொடக்கம் அற்புதமாக அமைந்தது. 6 ஓவர்களிலேயே 70 ரன்களுக்கும் அதிகமாக விளாசினோம். ஒவ்வொரு வீரரும் வாய்ப்பு கிடைத்த போது சிறப்பாக விளையாடினார்கள். ரொமாரியோ ஷெப்பர்ட்-ன் அதிரடி பிரம்மிப்பாக அமைந்தது. அவர் தான் இந்த வெற்றியை பெற்று கொடுத்துள்ளார். அவர் அடித்த ரன்களும், டெல்லி அடித்த ரன்களும் தான் வித்தியாசத்தை கொடுக்கிறது.

எப்போது முகத்தில் சிரிப்புடன் மகிழ்ச்சியாக இருப்பார். எந்த சவாலுக்கும் தயாராக இருப்பார். இன்றைய ஆட்டத்தில் பவுலிங் செய்யாததற்கு எந்த காரணமும் இல்லை. சரியான நேரத்தில் நான் பவுலிங் செய்வேன். இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி அனைத்து அடிப்படையையும் சிறப்பாக செய்தது. அதனால் நான் பவுலிங் செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், மும்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த பும்ராவை பற்றி ஹர்திக் பாண்டியா பேசாதது ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது.

Story first published: Sunday, April 7, 2024, 20:46 [IST]
Other articles published on Apr 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+