Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs DC : பவுலிங் மெஷின்யா நீ.. இதெல்லாம் வேற லெவல் சம்பவம்.. மும்பை வெற்றிக்கு காரணமே அவர் தான்!

மும்பை : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றிபெறுவதற்கு நட்சத்திட வீரர் பும்ராவின் பவுலிங்கே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்களை குவித்தது. கடைசி நேரத்தில் களமிறங்கிய ரொமாரியோ ஷெப்பர்ட் 10 பந்துகளில் 4 சிக்ஸ், 3 ஃபோர்ஸ் உட்பட 39 ரன்களை விளாசினார். அதேபோல் டிம் டேவிட் 21 பந்துகளில் 45 ரன்களை விளாசினார்.

IPL 2024 MI vs DC Jasprit Bumrah is the important reason for the victory against Delhi Capitals at Wankhede Stadium

இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்து தோல்வியடைந்தது. டெல்லி அணி சார்பாக அதிரடியாக விளையாடி ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 7 சிக்ஸ், 3 ஃபோர்ஸ் உட்பட 71 ரன்களை விளாசினார். அதேபோல் இளம் வீரர் பிரித்வி ஷா 40 பந்துகளில் 66 ரன்களை விளாசினார். மும்பை அணி சார்பாக கோட்ஸி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் சிறப்பாக விளையாடிய ரொமாரியோ ஷெப்பர்ட்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கடைசி ஓவரில் 32 ரன்கள் விளாசியதே மும்பை அணி வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ராவும் மும்பை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஏனென்றால் 4 ஓவர்கள் வீசிய பும்ரா வெறும் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

எப்போதெல்லாம் மும்பை அணி சிக்கலில் சிக்கியதோ, அப்போதெல்லாம் பும்ராவை மும்பை அணி அட்டாக்கில் கொண்டு வந்தது. பவர் பிளேவில் 2வது ஓவரை வீசிய பும்ரா, அதன்பின் நீண்ட நேரமாக அட்டாக்கில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஒரு கட்டத்தில் பிரித்வி ஷாவின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாத போது, மும்பை 12வது ஓவரை வீச அழைக்கப்பட்டார்.

அந்த ஓவரில் அதிரடியாக ஆடிய பிரித்வி ஷாவின் விக்கெட்டை அற்புதமான யார்க்கரால் வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து டைம் அவுட்டின் போது மும்பை அணி ஆட்டத்தை மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டிய நிலை வந்த போது, உடனடியாக பும்ரா அட்டாக்கில் வந்தார். அந்த ஓவரிலும் அபிஷேக் போரல் ஆட்டமிழக்க, பின்னர் மீண்டும் 18வது ஓவரை வீச கொண்டு வரப்பட்டார். இந்த ஆட்டத்தில் 11 டாட் பால்களை வீசிய அவர் வெறும் 3 பவுண்டரிகளை மட்டுமே விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, April 7, 2024, 20:05 [IST]
Other articles published on Apr 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+