For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 வரலாற்றை புரட்டிப் போட்ட மும்பை இந்தியன்ஸ்.. உலகிலேயே எந்த அணியும் செய்யாத மாபெரும் ரெக்கார்டு

மும்பை : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மாபெரும் டி20 வரலாறு ஒன்றை படைத்துள்ளது. ஒரு அணியின் எந்த ஒரு வீரரும் அரைசதம் அடிக்காமலே அதிக ஸ்கோர் குவித்த டி20 அணிகளின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாது உலகின் எந்த ஒரு உள்ளூர் அல்லது சர்வதேச டி20 போட்டிகளிலும் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் அதிக ஸ்கோர் எடுத்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

IPL 2024 MI vs DC Mumbai Indians regsitered history with scoring 234 runs without any fifty

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 234 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்ச ரன்களை எடுத்தது ரோஹித் சர்மா. அவர் 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். அடுத்து இஷான் கிஷன் 42, ஹர்திக் பாண்டியா 39, டிம் டேவிட் 45, ரொமாரியோ ஷெப்பர்ட் 39 ரன்கள் குவித்தனர். இப்படி அனைத்து பேட்ஸ்மேன்களும் ரன் குவித்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி 234 ரன்கள் குவித்தது.

இதில் கடைசி ஓவரில் மட்டும் 32 ரன்கள் குவிக்கப்பட்டது. ரொமாரியோ ஷெப்பர்ட் அந்த ஓவரில் நான்கு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்தார். இதை அடுத்து மும்பை அணி சாதனைப் பட்டியலில் சேர்ந்தது. மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதற்கு முன் இரண்டு அணிகள் மட்டுமே எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்காமல் 200 ரன்களுக்கும் மேல் ரன் குவித்து இருந்தன. தற்போது மும்பை இந்தியன்ஸ் மூன்றாவது அணியாக அந்தப் பட்டியலில் இணைந்ததோடு அதிக ரன் குவித்த அணியாகவும் உள்ளது. அந்த சாதனைப் பட்டியல் இங்கே -

234/5 - மும்பை இந்தியன்ஸ் v டெல்லி கேபிடல்ஸ், இன்று

226/5 - சோமர்செட் v கென்ட், 2018

222/5 - அயர்லாந்து-A v நேபாளம்-A, 2024

Story first published: Sunday, April 7, 2024, 23:37 [IST]
Other articles published on Apr 7, 2024
English summary
IPL 2024 MI vs DC : Mumbai Indians regsitered history with scoring 234 runs without any fifty
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+