Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 5 ஓவரில் 96 ரன்கள்.. எப்படி போட்டாலும் அடித்த ரொமாரியோ ஷெப்பர்ட்.. இதுதான்டா பல்தான்ஸ்!

மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற 235 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 20வது போட்டியில் மும்பை அணியை எதிர்த்து டெல்லி அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் மும்பை அணி தரப்பில் வழக்கம் போல் ரோகித் சர்மா - இஷான் கிஷன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. டெல்லி அணி தரப்பில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான கலீல் அஹ்மத் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரிலேயே 7 ரன்கள் சேர்க்கப்பட, இஷாந்த் சர்மா வீசிய 2வது ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டது.

IPL 2024 MI vs DC Mumbai set a target of 235 runs for Delhi to win at Wankhede

இதன்பின் கலீல் அஹ்மத் பவுலிங்கில் இஷான் கிஷன் 12 ரன்களை விளாச, மும்பை அணியின் ஸ்கோர் வேகமாக எகிறியது. தொடர்ந்து வீசிய ரிச்சர்ட்சன் பவுலிங்கில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை ரோகித் சர்மா விளாச, பவர்பிளே ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ரோகித் சர்மா அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அக்சர் படேல் பந்தில் 49 ரன்களில் போல்டாகினார் ரோகித் சர்மா. தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் உடனடியாக ஹர்திக் களமிறங்கினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும் இஷான் கிஷன் மறுமுனையில் நின்று விளாசி தள்ளினார். அக்சர் படேல் பவுலிங்கில் சிக்சர் அடித்த அவர், அடுத்த பந்திலேயே அக்சரின் அற்புதமான கேட்ச்சால் 42 ரன்களில் வெளியேறினார். 11 ஓவர்கள் முடிவில் மும்பை அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் சேர்த்திருந்தது. பின்னர் வந்த திலக் வர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து 6 ரன்களில் வெளியேறினார். இதன்பின் ஃபினிஷர்களான ஹர்திக் பாண்டியா - டிம் டேவிட் இருவரும் இணைந்தனர்.

IPL 2024 MI vs DC Mumbai set a target of 235 runs for Delhi to win at Wankhede

இவர்கள் இருவரும் 15 ஓவர்கள் வரை நிதானம் காக்க, ரிச்சர்ட்சன் வீசிய 16வது ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடியாக தொடங்கினார் டேவிட். அந்த ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட, கலீல் அஹ்மத் வீசிய 17வது ஓவரில் 2 சிக்சர்கள் உட்பட 17 ரன்கள் விளாசப்பட்டது. இதன்பின் 18வது ஓவரில் ஹர்திக் பாண்டியா சிக்சர் அடிக்கும் முயற்சியில் 39 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் ரொமாரியோ ஷெப்பர்ட் - டிம் டேவிட் இருவரும் இணைந்தனர். இஷாந்த் சர்மா வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் மும்பை அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. பின்னர் கடைசி ஓவரை வீச நார்கியே அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் ரொமாரியோ ஷெப்பர்ட் 4,6,6,6,4,6 என்று 32 ரன்கள் விளாசினார். இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய ரொமாரியோ ஷெப்பர்ட் 10 பந்துகளில் 39 ரன்களை விளாசி அசத்தினார்.

Story first published: Sunday, April 7, 2024, 17:23 [IST]
Other articles published on Apr 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+