Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 MI vs DC : தோனியின் நீண்ட நாள் ரெக்கார்டை உடைத்து எறிந்த ரோஹித்.. கதறிய டெல்லி கேபிடல்ஸ்

மும்பை : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி பவர் பிளேவில் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுக்க முக்கிய காரணமாக இருந்தார்.

மேலும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை குவித்து இருக்கிறார் ரோஹித் சர்மா. அதே போல, ஒரே அணிக்கு எதிராக அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார் ரோஹித் சர்மா.

IPL 2024 MI vs DC Rohit Sharma breaks MS Dhoni six record in IPL

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஜோடியான ரோஹித் சர்மா - இஷான் கிஷன் அதிரடியாக ரன் குவித்தனர். ரோஹித் சர்மா 27 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அரைசதத்தை ஒரு ரன்னில் தவற விட்டார் ரோஹித் சர்மா. எனினும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 3 சிக்ஸ் அடித்தார்.

அதன் மூலம் ஒரே அணிக்கு எதிராக அதிக சிக்ஸ் அடித்து இருந்த தோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 46 சிக்ஸ் அடித்து இருக்கிறார். தற்போது ரோஹித் சர்மா டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 49 சிக்ஸ் அடித்து இருக்கிறார்.

ஒரே ஐபிஎல் அணிக்கு எதிராக அதிக சிக்ஸ் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை முந்தி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் ரோஹித் சர்மா. மேலும், ஒரே அணிக்கு எதிராக 1000 ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் ஏற்கனவே இடம் பிடித்து இருக்கும் ரோஹித் சர்மா, தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராகவும் 1000 ரன்களை குவித்து இருக்கிறார். முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அவர் 1000 ரன்கள் குவித்து இருந்தார்.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 234 ரன்கள் குவித்தது. டிம் டேவிட் 21 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்த ரொமாரியோ ஷெப்பர்ட் 10 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து இருந்தார்.

Story first published: Sunday, April 7, 2024, 18:43 [IST]
Other articles published on Apr 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+