Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs RCB : இரண்டே பந்துகள் கதறிய ஆர்சிபி.. சோலியை முடித்த பும்ரா.. 5 விக்கெட்கள் அள்ளி சாதனை

மும்பை : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசையை துவம்சம் செய்தார் பும்ரா. இரண்டு முறை, அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினார். பெங்களூரு அணியின் இம்பாக்ட் வீரர் திட்டத்தையும் உடைத்தார் பும்ரா.

மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி 3, வில் ஜாக்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். பும்ரா விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார்.

IPL 2024 MI vs RCB Jasprit Bumrah fifer changed RCB plans on impact player

அதன் பின் ரஜத் படிதார் 26 பந்துகளில் 50, ஃபாப் டுபிலேசிஸ் 40 பந்துகளில் 61 ரன்கள் குவித்தனர். மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார். டுபிலேசிஸ், தினேஷ் கார்த்திக் களத்தில் நின்ற போது 16 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து இருந்தனர். அடுத்து அதிரடி பேட்ஸ்மேன் லோம்ரார் விக்கெட் கையில் இருந்ததால், பெங்களூரு அணி கடைசி ஓவர்களில் பெரிய அளவில் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், பேட்டிங்கில் இம்பாக்ட் வீரரை களமிறக்காமல் விட்டால், பந்துவீச்சின் போது கூடுதல் பந்துவீச்சாளரை இம்பாக்ட் வீரராக பயன்படுத்த திட்டமிட்டு இருந்தது பெங்களூரு அணி. ஆனால், பும்ரா 17வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் டுபிலேசிஸ் மற்றும் லோம்ரார் விக்கெட்களை வீழ்த்தினார். பெங்களூரு அணி 6 விக்கெட்களை இழந்தது. அடுத்து பெரிய பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில் வேறு வழியின்றி சவுரவ் சவுஹானை இம்பாக்ட் வீரராக ஆட வைத்தது அந்த அணி.

அடுத்து 19வது ஓவரில் பந்து வீசிய பும்ரா மீண்டும் அடுத்தடுத்த பந்துகளில் சவுரவ் சவுஹான் மற்றும் விஜயகுமார் வைஷாக் விக்கெட்களை வீழ்த்தினார். பும்ரா 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார். பெங்களூரு அணியை சின்னாபின்னப்படுத்தி சிதற வைத்தார்.

பின்னர் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 53 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். அதன் காரணமாக தப்பிய பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.

Story first published: Thursday, April 11, 2024, 21:44 [IST]
Other articles published on Apr 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+