For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருக்கிட்ட சின்ன பசங்களா.. வான்கடே மைதானத்தில் வாள்தூக்கி நின்ற தினேஷ் கார்த்திக்.. ஆர்சிபி கம்பேக்

மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியான அரைசதம் காரணமாக ஆர்சிபி அணி 196 ரன்களை குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் விராட் கோலி - டூ பிளசிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. நிதானமாக தொடங்கிய விராட் கோலி 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து பும்ரா பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் அதிக எதிர்பார்ப்புடன் வந்த ஜாக்ஸ் 8 ரன்களில் வெளியேறினார்.

IPL 2024 MI vs RCB Rajat Patidar and Dinesh Karthik helps RCB set a target of 197 runs for Mumbai Indians

இதனால் ஆர்சிபி அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இதன்பின் இணைந்த டூ பிளசிஸ் - ரஜத் பட்டிதர் கூட்டணி ஆர்சிபி அணியை மீட்டெடுத்தது. டூ பிளசிஸ் ஒரு பக்கம் அசத்தலாக பவுண்டரி அடிக்க தொடங்க, மறுபக்கம் ரஜத் பட்டிதர் கிளாசிக் ஷாட்களால் அனைவரையும் மிரள வைத்தார். இதனால் ஆர்சிபி அணியின் ஸ்கோரும் வேகமாக எகிறியது. 10 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 89 ரன்கள் சேர்த்திருந்தது.

தொடர்ந்து கோட்ஸி பவுலிங்கில் 2 சிக்சர்களை விளாசிய பட்டிதர், 25 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஆனால் அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழக்க, பின்னர் வந்த மேக்ஸ்வெல் வழக்கம் போல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு மேக்ஸ்வெல் முன்னேறினார். இதன்பின் தினேஷ் கார்த்திக் களமிறங்கி ஒரு பக்கம் விளையாட, மறுபக்கம் நின்ற டூ பிளசிஸ் 33 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

இதனால் 15 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது 16வது ஓவரை வீசிய ஆகாஷ் மத்வால் பவுலிங்கில் தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரிகளை விளாசி மிரட்டினார். ஆனால் அடுத்த ஓவரிலேயே டூ பிளசிஸ் 40 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதன்பின் வந்த ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். லோம்ரோர் மற்றும் விஜயகுமார் டக் அவுட்டாக, இம்பேக்ட் பிளேயராக வந்த சவுரப் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் ஆர்சிபி அணி 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் கடைசி ஓவரை வீச ஆகாஷ் மத்வால் வந்தார். இந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் இரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 19 ரன்களை விளாசினார். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 4 சிக்ஸ், 5 ஃபோர்ஸ் உட்பட 53 ரன்களை விளாசினார்.

Story first published: Thursday, April 11, 2024, 21:39 [IST]
Other articles published on Apr 11, 2024
English summary
IPL 2024 MI vs RCB : Rajat Patidar and Dinesh Karthik helps RCB set a target of 197 runs for Mumbai Indians
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+