Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரை நம்பித்தான் 24.75 கோடி கொடுத்திருக்கோம்.. இப்படி ஆகிப் போச்சே.. பதற்றத்தில் ஐபிஎல் அணி

கொல்கத்தா : 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தேர்வில் பெரிய தவறை செய்து இருப்பதாக விமர்சகர்கள் பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர். வேகப் பந்துவீச்சில் அந்த அணி பலவீனமாக காட்சி தருகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சரியாக செயல்படவில்லை. பேட்டிங்கில் ரிங்கு சிங் போன்ற சில பேட்ஸ்மேன்கள் சில போட்டிகளில் கை கொடுத்த போதும் பந்துவீச்சில் அந்த அணி பலமாக இல்லை.

IPL 2024 Mitchell Starc may not create any impact for Kolkata Knight Riders

இந்த நிலையில், 2024 ஐபிஎல் ஏலத்தின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஒருவரை வாங்கி விட வேண்டும் என முட்டி மோதியது. பல நல்ல பந்துவீச்சாளர்களை மற்ற அணிகள் போட்டி போட்டு வாங்கிய நிலையில் உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் வந்த போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஆலோசகர் கவுதம் கம்பீர் 24.75 கோடி வரை ஏலத்தில் விலை கேட்டு அவரை வாங்கினார்.

ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவே ஒரு வீரருக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச சம்பளம் ஆகும். ஆனால், பலரும் மிட்செல் ஸ்டார்க் அந்த அளவுக்கு விலை கொடுத்து வாங்க தகுதியான வீரர் அல்ல என விமர்சனம் செய்து வந்தனர். மிட்செல் ஸ்டார்க்கை 24.75 கோடி கொடுத்து வாங்கி விட்ட நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது? என பலரும் உற்று நோக்கி வருகின்றனர்.

தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் வேகப் பந்துவீச்சாளர்களில் 20 டி20 போட்டிகளுக்கு மேல் ஆடிய அனுபவம் கொண்டவர்கள் ஆண்ட்ரே ரஸ்ஸல், மற்றும் மிட்செல் ஸ்டார்க் மட்டுமே. மற்ற வேகப் பந்துவீச்சாளர்கள் எல்லோருமே அனுபவம் குறைந்தவர்கள் தான். அவர்களில் ஹர்ஷித் ரானா மீது எதிர்பார்ப்பு உள்ளது. இப்படி பலவீனமான வேகப் பந்துவீச்சு தாக்குதலை கையில் வைத்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெறும் மிட்செல் ஸ்டார்க்கை மட்டுமே வேகப் பந்துவீச்சில் நம்பி களமிறங்க உள்ளது.

இது எந்த வகையிலும் அந்த அணிக்கு பலன் தராது என பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர். அணித் தேர்வில் கண்டமேனிக்கு சொதப்பி வைத்து இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். எனினும், அந்த அணியின் ஒரே நம்பிக்கை சுழற் பந்துவீச்சாளர்கள் தான். சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, முஜீப் உர் ரஹ்மான் போன்ற டி20 அனுபவமிக்க சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அதை வைத்தே போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

Story first published: Monday, March 18, 2024, 17:27 [IST]
Other articles published on Mar 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+