Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி! பைனல் தான் முக்கியம்.. நேரில் வந்து சந்தித்த கோலி.. மறைமுக வார்த்தையால் தோனி நறுக் பதில்

பெங்களூர் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு எதிரான 68வது லீக் ஆட்டத்தில் ஆர் சி பி அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி அணி தகுதி பெற்றதை அந்த அணி வீரர்கள் மிக விமர்சையாக கொண்டாடினர்.

மேலும் ஆர் சி பி ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களை அவமதிக்கும் விதமாக பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டனர். இது சமூக வலைத்தளத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. மேலும் போட்டி முடிந்தவுடன் ஆர் சி பி வீரர்களும் கைக்குலுப்பதற்காக தோனி காத்துக்கொண்டிருந்தார்.

IPL 2024 - MS Dhoni advice to Virat kohli after csk vs rcb game in bangalore

ஆனால் ஆர்சிபி வீரர்கள் தொடர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் கடுப்பாகி டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்தார். இந்த நிலையில் தோனியிடம் கைகுலுக்கவில்லை என்று விராட் கோலி நேராகவே சிஎஸ்கே வின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வந்து தோனியை பார்த்து சந்தித்திருக்கிறார். அப்போது தோனியும் விராட் கோலி பேசியிருக்கிறார்கள்.

அதை பற்றிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. விராட் கோலி, சி எஸ் கே ரசிகர்களை பார்த்து வாயை மூடுங்கள் என்று சைகை காட்டியது, பின் ஒவ்வொரு விக்கெட் விழுந்ததும் தேவையில்லாமல் கத்தியது போன்ற சம்பவங்கள் தோனிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இதனால் தோனி, விராட் கோலி மீது அதிருப்தியில் இருந்திருக்கிறார்.

தோனியை வந்து விராட் கோலி சந்தித்தபோது பைனல் இன்னும் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் நீங்கள் எப்படி விளையாடினர்களோ, அதே போல் பைனலிலும் விளையாடுங்கள். அப்போதுதான் கோப்பையை வெல்ல முடியும். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார். தோனியின் இந்த பேச்சு விராட் கோலியை மனமுடைய செய்திருக்கிறது.

தாம் ஓவராக தான் சென்று விட்டோமோ என்று தற்போது தான் விராட் கோலி உணர தொடங்கி இருக்கிறார். வெறும் பிளே ஆப் சுற்றுக்கு தான் சென்று இருக்கீர்கள் இன்னும் நீங்கள் கோப்பையை வெல்லவில்லை என்பதை தான் தோனி மறைமுகமாக விராட் கோலிக்கு ஞாபகப்படுத்தி இருக்கிறார்.

Story first published: Monday, May 20, 2024, 23:34 [IST]
Other articles published on May 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+