Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL -ரோகித் சர்மாவின் ரெக்கார்டை காலி செய்த தோனி.. கடைசி ஓவரில் மாஸ் சாதனை!

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் தோல்வியை நேற்று சந்தித்தது. இந்த போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோற்றாலும் அதைப்பற்றி யாருமே கவலைப்படவில்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு தோனி ஒரு மாஸ் சம்பவம் செய்திருக்கிறார்.

IPL 2024 - MS Dhoni breaks Rohit sharma record for scoring 20 runs in a over most times


உலகத்திலேயே ஒரு அணி தோற்றும் அதனை ரசிகர்கள் கொண்டாடுகிறது என்றால் அது சிஎஸ்கேவுக்காக மட்டும்தான் இருக்கும்.ஏனென்றால் நேற்று கடைசி ஓவரில் தோனி நோக்கியா வீசிய ஓவரில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர் என பறக்கவிட்டு 20 ரன்கள் சேர்த்தார். அவர் மட்டும் 19 ஆவது ஓவரில் ஒரு 20 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால், நிச்சயம் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றிருக்கும்.

இந்த நிலையில் இதன் மூலம் 42 வயதான தோனி ஒரு மாபெரும் சாதனை படைத்திருக்கிறார்.இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 20 வது ஓவரில் 20 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் தோனி முதலிடத்தில் இருக்கிறார். தோனி 20வது ஓவரில் மட்டும் ஆறு முறை 20 ரன்களுக்கு மேல் அடித்து இருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ரோகித் சர்மா மார்க்ஸ் ஸ்டோனிஸ், டிவில்லியர்ஸ் ஆகியோர் இருக்கிறார்கள்.

இவர்கள் மூன்று பேருமே தலா மூன்று முறை 20 ரன்கள் கடைசி ஓவரில் அடித்திருக்கிறார்கள். யுவராஜ் சிங், டேவிட் மில்லர், கிறிஷ் மோரிஸ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா இரண்டு முறை அடித்திருக்கிறார்கள். இதேபோன்று ஐபிஎல் தொடரில் ஒரு ஓவரில் அதிக முறை 20 ரன்களுக்கு மேல் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை தோனி பெற்றிருக்கிறார்.

தோனி 9 முறை ஒரு ஓவரில் 20 ரன்களுக்கு மேல் ஐபிஎல் தொடரில் அடித்து இருக்கிறார்.இதற்கு முன்பு ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்திருந்தார். ரோகித் 8 முறை 20 ரன்களுக்கு மேல் ஐபிஎல் தொடரில் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ரிஷப் பண்ட் ஆறுமுறையும்,சேவாக் ஐந்து முறையும்,யூசுப் பதான், ஐந்து முறையும் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தனர்.

Story first published: Monday, April 1, 2024, 15:00 [IST]
Other articles published on Apr 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+