Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி ஓய்வு பெற போவது எப்போது? மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் ஹஸ்ஸி

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். தோனிக்கு தற்போது 42 வயது ஆகிவிட்டதால், இதுதான் அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2024 - MS Dhoni can play for another 2 years for csk says Michael hussey

இதனால் தோனி எப்போது ஓய்வு பெற போகிறார் என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் தோனியின் எதிர்காலம் குறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி, பல கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், தோனி எப்போது ஓய்வு பெறப் போகிறார் என்று ரகசியமாக வைத்திருக்கிறார்.

நிச்சயமாக விரைவில் அவர் அறிவிக்க மாட்டார். தோனி விஷயத்தில் என்ன நடக்கிறது என்று அவருக்கு மட்டும் தான் தெரியும். என்னை பொறுத்தவரை தோனி இன்னும் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். சிஎஸ்கே பயிற்சி முகாம்க்கு தொடர் தொடங்குவதற்கு முன்பே வந்து நன்றாக பயிற்சி மேற்கொள்கின்றார். பந்துகளை நன்றாக அடிக்கின்றார்.

தோனிக்கு கடந்த ஆண்டு மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக தான் நடப்பு தொடரில் அவரை பத்திரமாக நாங்கள் கையாண்டோம். என்னை பொறுத்தவரை தோனியின் பேட்டிங் பார்மை வைத்து பார்த்தால் இன்னும் இரண்டு ஆண்டுகள் அவரால் நிச்சயம் விளையாட முடியும். ஆனால் அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தோனி பேட்டிங் வரிசையில் முன்பே விளையாட வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் அந்த அறுவை சிகிச்சையால் தோனிக்கு வேறு எந்த சிக்கலும் வந்து விடக்கூடாது என்பதால் தான் நாங்கள் கடைசி கட்டத்தில் தோனியை களம் இறக்க முடிவு செய்தோம். இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு திடீரென்று கேப்டன் உடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தோனி பங்கேற்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

அப்போதுதான் தெரிந்தது ருதுராஜ் தான் புதிய கேப்டனாக வரப் போகிறார். ருதுராஜ் நல்ல கேப்டனாக சிஎஸ்கேவுக்கு செயல்பட்டு வருகிறார். தோனியை பொருத்தவரை தாம் விளையாடும் போதே அடுத்த ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று நினைக்கின்றார். பிளமிங்கும் ருதுராஜை இரண்டு ஆண்டுகள் முன்பிலிருந்து கேப்டன் பதவிக்கு முன்கூட்டியே தயார் செய்து வருகிறார் என்று மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, May 16, 2024, 17:32 [IST]
Other articles published on May 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+