Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னையில் முடிந்த லீக் போட்டி! ஆனால், இது நடந்தால் தோனி மேலும் 2 போட்டி சேப்பாக்கத்தில் விளையாடலாம்

சென்னை: ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கினார்.

இந்த போட்டி தான் சேப்பாக்கம் மைதானத்தில் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்தனர். மேலும் இனி நம்மால் சேப்பாக்கம் மைதானத்தில் தோனியை பார்க்க முடியாது என்று ரசிகர்கள் பிரியாவடை அளித்தார்கள்.

IPL 2024 - MS Dhoni can still Play 2 more games in chennai chepauk

ஆனால் இது உண்மை கிடையாது. சில விஷயங்கள் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக நிகழ்ந்தால், தோனி நடப்பாண்டில் அதிகபட்சம் இரண்டு போட்டிகள் சென்னையில் விளையாடலாம். அதற்கு என்ன நடக்க வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸின் தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. வரும் மே 18ஆம் தேதி சென்னை, ஆர் சி பி அணிகள் பல பரிட்சை நடத்துகிறது.

இதில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம். அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றால் அவர்கள் மூன்றாவது இடத்திற்கு சரிய கூடும். இதனை பயன்படுத்திக் கொண்டு பதினாறு புள்ளிகளை சிஎஸ்கே பெரும்பட்சத்தில் அந்த அணியுடன் ரன் ரேட் அதிகமாக இருப்பதால் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி விடும்.

இந்த சூழலில் சிஎஸ்கே அணி முதல் குவாலிஃபயரில் கொல்கத்தா அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் விளையாடும். இதில் சி எஸ் கே அணி தோற்கும் பட்சத்தில் குவாலிஃபயர் 2வில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். அந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அதை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறும்.

ஒருவேளை சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தால், அகமதாபாத்தில் மே 22 ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியில் விளையாடக்கூடும். இதில் வெற்றி பெற்றால் மே 24ஆம் தேதி மீண்டும் சேப்பாக்கத்தில் நடைபெறும் குவாலிபையர் 2வில் வென்று 26 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடலாம். இதனால் பிளே ஆப் சுற்றுக்கு சி எஸ் கே அணி சென்று அங்கு வெற்றி பெற்றால் மீண்டும் சென்னையில் தோனி ஆசைப்படி கிரிக்கெட் இல் இருந்து விடை பெறலாம்.

Story first published: Thursday, May 16, 2024, 6:59 [IST]
Other articles published on May 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+