Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MS Dhoni : செம லுக்- நீளமான முடி! பழைய ஹேர் ஸ்டைலுடன் திரும்பும் தோனி.. CSK-க்காக பயிற்சி தொடக்கம்

MS Dhoni : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனுக்காக தயாராகும் பகுதியில் மகேந்திர சிங் தோனி பயிற்சியை தொடங்கி இருக்கிறார். 42 வயதான தோனி தற்போது ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.

இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மார்ச் மாதம் தொடக்கத்தில் சென்னையில் முகாம்மிட்டு பயிற்சியை தொடங்க இருக்கிறார்கள்.அதற்கு முன்பாக தோனி தன்னுடைய வீட்டிலே அடிப்படை பேட்டிங் பயிற்சி தொடங்கி இருக்கிறார்.

IPL 2024 - MS Dhoni is began his training for CSK in Vintage look hair style

இதன் புகைப்படம் தற்போது வெளியாகி பட்டையை கிளப்புகிறது. இதில் தோனி தன்னுடைய பழைய ஹேர் ஸ்டைல் லுக்கில் இருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.தோனி தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் நீளமான முடியை வைத்துக்கொண்டு ஸ்டைலிஷ் ஐகானாக திகழ்ந்தார். அவருடைய ஹேர் ஸ்டைலை பார்த்து பல இளைஞர்களும் அதேபோல் முடியை வைத்துக்கொண்டு அலைந்தார்கள்.

தோனியின் அந்த ஹேர் ஸ்டைலை பார்த்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முசரஃப் கூட, தயவு செய்து இந்த முடியை வெட்டாதீர்கள்.அது உங்களுக்கு சூப்பராக இருக்கிறது என்று பாராட்டினார். ஒரு கட்டத்தில் தோனி அந்த மொழியை வெட்டும்போது அது தேசிய செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே போல் லாங் ஹேர் ஸ்டைலில் தோனி இருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய ஆரம்ப கிரிக்கெட் காலத்தில் லாங் ஹேர் ஸ்டைல் வைத்திருந்த தோனி தற்போது தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் போது அதே போல் ஒரு ஹேர் ஸ்டைலை வைத்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதற்காக இவ்வாறு முடிவு எடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல் லாங் ஹேர் ஸ்டைலில் ஆரம்பித்த தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை அதே லாங் ஹேர் ஸ்டைலில் முடியப்போகிறதா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நடப்பு சாம்பியனாக சிஎஸ்கே அணி ஐபிஎல் 17வது சீசனில் களமிறங்க உள்ளது ராயுடு போன்ற வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களை வைத்து சிஎஸ்கே அணி நடப்பு தொடரில் களமிறங்க உள்ளது. இதனால் தோனி தன்னுடைய திட்டத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்ய இருக்கிறார். டேரல் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, சர்துல் தாக்கூர், சமீர் ரிஸ்வி, முஸ்தஃபிர் ரஹ்மான் போன்ற வீரர்களை சிஎஸ்கே அணி நடப்பு சீசனுக்காக வாங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, February 7, 2024, 7:30 [IST]
Other articles published on Feb 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+