Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை இறுதிப் போட்டியில் ஆடிய ஒரே வீரர் இவர்தான்.. மெகா சாதனை செய்த தோனி

சென்னை : ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடிய வீரர் என்ற இமாலய சாதனை ஒன்றை தன்வசம் வைத்திருக்கிறார் தோனி. இந்த சாதனையை வேறு எந்த வீரராலும் அத்தனை எளிதில் முறியடித்து விட முடியாது. அந்த அளவுக்கு அதிக ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடி இருக்கிறார் தோனி.

2008 முதல் 2023 வரை இதுவரை 16 ஐபிஎல் தொடர்கள் நடந்துள்ளன. இதில் சிஎஸ்கே அணி சார்பில் 14 ஐபிஎல் தொடர்களில் பங்கேற்ற தோனி, ரைஸிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி சார்பில் 2016 மற்றும் 2017 ஐபிஎல் தொடர்களில் ஆடி இருந்தார்.

IPL 2024 MS Dhoni is the only player who played most IPL finals in history

இந்த 16 தொடர்களில் சிஎஸ்கே அணி சார்பில் 10 முறையும், புனே அணி சார்பில் ஒரு முறையும் தோனி ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடி இருக்கிறார். 2017இல் புனே அணிக்காக இறுதிப் போட்டியில் பங்கேற்றார். சிஎஸ்கே அணிக்காக 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தோனி ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்று இருந்தார்.

இதில் 2008, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சிஎஸ்கே அணி கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியே அதிக ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் பங்கேற்று உள்ளது. அந்த வகையில் தோனிக்கு அடுத்து அதிக ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடிய முதல் ஐந்து வீரர்களில் நால்வர் சிஎஸ்கே அணி வீரர்களே.

தோனி 11 இறுதிப் போட்டிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், ரவீந்திர ஜடேஜா 8 இறுதிப் போட்டிகளில் ஆடி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரு ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்றார். அதன் பின் சிஎஸ்கே அணிக்காக ஏழு இறுதிப் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்.

அதே போல அம்பத்தி ராயுடுவும் எட்டு முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடி இருக்கிறார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நான்கு முறையும், சிஎஸ்கே அணிக்காக நான்கு முறையும் பங்கேற்று இருக்கிறார். சுரேஷ் ரெய்னாவும் எட்டு முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக பங்கேற்று இருக்கிறார்.

முதல் நான்கு இடங்களை சிஎஸ்கே வீரர்கள் பிடித்த நிலையில், ஏழு ஐபிஎல் இறுதிப் போட்டிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். அவரும் சிஎஸ்கே அணிக்காக தனது முதல் ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்று இருக்கிறார். அதன் பின் அணி மாறிய அவர் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தலா ஒரு முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடினார்.

Story first published: Monday, March 11, 2024, 14:54 [IST]
Other articles published on Mar 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+