Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்போ தெரியுதா தோனி எவ்வளவு புத்திசாலின்னு! அதிர்ச்சியில் இருக்கும் ஆர்சிபி.. ஓரங்கட்டிய சிஎஸ்கே

சென்னை: ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் இங்கிலாந்து வீரர்கள் முக்கிய கட்டத்தில் இருந்து அணியை விட்டு வெளியேறி இருப்பது பல்வேறு அணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் சிஎஸ்கே மட்டும் இந்த பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து இருக்கிறது.

ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே சிஎஸ்கே அணி மோயின் அலி பெரிய அளவில் ஆட்டத்தில் சேர்க்கவில்லை. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக மோயின் அலி, இருந்த போதிலும் அவர் நல்ல பார்மில் இருந்த போதிலும் இந்த சீசனில் ஏன் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ரசிகர்களும் கேள்வி கேட்டு வந்தனர்.

IPL 2024 - MS Dhoni master class move gives huge surprise to other teams

வேண்டுமென்றே சிஎஸ்கே மோயின் அலியை ஓரம் கட்டுவதாக பலரும் விமர்சித்தனர். ஆனால் சிஎஸ்கே வின் இந்த முடிவுக்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்று தற்போது பலருக்கும் தெரிந்திருக்கும். மோயின் அலி, ஐபிஎல் தொடரில் இருந்து முக்கிய கட்டத்தில் விலகிவிடுவார் என்பது சிஎஸ்கே அணிக்கு முன்பே தெரிந்திருக்கும்.

இதனால் தான் மோயின் அலி இல்லாமல் என்ன செய்ய முடியும் என்பதை சிஎஸ்கே பார்த்து இருக்கிறது. மேலும் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முக்கியமான கட்டத்தில் மோயின் அலியை சிஎஸ்கே பயன்படுத்தியது. தற்போது மோயின் அலி இல்லை என்றாலும் ரவிந்த்ரா, சாட்நர் என இரண்டு வீரர்கள் சிஎஸ்கேவால் பயன்படுத்த முடியும்.

இதனால் சிஎஸ்கே அணிக்கு மோயின் அலி, விலகினாலும் எந்த ஒரு பெரிய பாதிப்பும் இருக்காது. ஆனால் மற்ற அணிகளுக்கு இங்கிலாந்து அணி வீரர்கள் முக்கிய தூணாக இருந்திருக்கிறார்கள். தற்போது அவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சி எஸ் கே மற்றும் தோனியின் புத்திசாலித்தனத்தால் தப்பித்து இருக்கிறது.

தற்போது ஆர்சிபி அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் கூட ஆர் சி பி அணியில் வில் ஜேக்ஸ், ரீஸ் டோப்லி போன்ற முக்கிய வீரர்கள் இடம் பெற்றிருக்க மாட்டார்கள். ஆனால் சிஎஸ்கே அணியில் ஷார்ட்நர், ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்கள் மோயின் அலிக்கு பதிலாக இருப்பார்கள். இது சிஎஸ்கே செய்த மாஸ்டர் ஸ்டோக்காக பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, May 13, 2024, 23:08 [IST]
Other articles published on May 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+