Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் எல்லாம் குழந்தை.. ஒரே கையில் சிக்சர் அடித்த தோனி.. மைதானத்தை விட்டு வெளியே சென்ற பந்து

விசாகப்பட்டினம் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சிஎஸ்கே, டெல்லி அணி மோதிய ஆட்டத்தில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல் பரிசு கிடைத்தது. தோனி கடைசியாக ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு விளையாடினார். அதன் பிறகு ஒரு ஆண்டு எந்தத் தொடரிலும் விளையாடாமல் ஓய்வில் இருந்தார்.

ஒரு ஆண்டு கழித்து ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தோனி களமிறங்கினாலும், முதல் இரண்டு போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தடுமாறிய போது இக்கட்டான நிலையில் வந்த தோனி 16 பந்துகளை எதிர் கொண்டு 37 ரன்கள் சேர்த்தார்.

IPL 2024 - MS Dhoni one handed six is a replicate of Rishabh pant signature shot

இதில் நான்கு பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். குறிப்பாக தென்னாப்பிரிக்கா வீரர் ஆண்ட்ரிட்ஜ் நோக்கியா வீசிய கடைசி ஓவரில் தோனி 20 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் தோனி என்றால் ஹெலிகாப்டர் ஷாட் என்று தான் ரசிகர்களுக்கு நினைவு வரும். அதேபோல் ரிஷப் பண்டுக்கு ஒரே கையால் அடிக்கும் சிக்ஸர் குறித்து பாராட்டுவார்கள்.

இந்த நிலையில் ரிஷப் பன்ட் கண்முன்னே தோனி ஒற்றைக்கையில் சிக்சர் அடித்த சம்பவம் ரசிகர்களை உற்சாக கடலில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 19.2 வது ஓவரில் தோனி ரிஷப் பண்ட் ஸ்டைலில் ஒற்றை கையில் பயன்படுத்தி சிக்சர் அடித்தார். அப்போது பந்து மைதானத்தை தாண்டி பார்வையாளர்கள் இருந்த மாடத்தில் சென்று விழுந்தது.

இந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவினாலும், தங்களுக்கு கவலை இல்லை என்பதை போல் ரசிகர்கள் இந்த ஆட்டத்தை கொண்டாடி வந்தனர். இந்தப் போட்டியில் டெல்லி வென்றதா இல்லை சென்னை வென்றதா என்ற குழப்பம் ஏற்படும் வகையில் சிஎஸ்கே ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்த வீடியோவை பதிவிட்டுள்ள ரசிகர்கள் ஒற்றைக் கையால் ரிஷப் பண்ட் சிக்ஸர் அடித்தாலும் அவர் எதிரே தோனி மாஸாக இந்த சம்பவத்தை செய்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் ஒற்றை கையால் சிக்சர் அடிக்கும் போது அது காலில் மிகப்பெரிய பாரத்தை கொடுக்கும். ஏற்கனவே தோனி தற்போது தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு விளையாடி வரும் நிலையில் தற்போது இந்த ஷாட்டின் மூலம் தோனிக்கு மீண்டும் காலில் வலி ஏற்பட்டு இருக்கிறது.

Story first published: Monday, April 1, 2024, 17:38 [IST]
Other articles published on Apr 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+