For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை கதிகலங்க வைத்த இரண்டாவது எதிரி.. 2012 ஐபிஎல்-இல் நடந்த சம்பவம்.. உண்மையை உடைத்த அஸ்வின்

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனியின் பரம எதிரி யார் என்று கேட்டால் எல்லோரும் மும்பை இந்தியன்ஸ் என எளிதாக கூறி விடுவார்கள். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியையும் தாண்டி ஒரு தனிநபர் சிஎஸ்கே கேப்டன் தோனியின் எதிரியாக இருந்தார் என முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் கூறி இருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐபிஎல் தொடரின் பரம எதிரிகள். வெறும் வார்த்தையில் மட்டுமில்லாமல் செயலிலும் இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று கடும் போட்டி போட்டு தலா 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று சமநிலையில் உள்ளன. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு கோப்பைகள் வென்று கொடுத்த அப்போதைய கேப்டன் கவுதம் கம்பீரும் சிஎஸ்கே மற்றும் தோனியின் எதிரியாக இருந்ததாக அஸ்வின் குறிப்பிட்டு இருக்கிறார்.

IPL 2024 MS Dhoni s nemesis is Gautam Gambhir says Ravichandran Ashwin

2012 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 2010 மற்றும் 2011இல் ஐபிஎல் கோப்பை வென்ற சிஎஸ்கே அணி மூன்றாவது முறையும் கோப்பை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 190 ரன்கள் குவித்தது. இத்தனை பெரிய ஸ்கோர் எடுத்ததால் எப்படியும் சிஎஸ்கே அணியே வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் 19.4 ஓவரில் கொல்கத்தா அணி இலக்கை எட்டி முதல்முறையாக கோப்பை வென்றது.

இது குறித்து பேசிய அஸ்வின், "சிஎஸ்கே-வுக்கு, மும்பை இந்தியன்ஸ் பல ஆண்டுகளாக எதிரியாக இருந்து வருகிறது. இந்த இரண்டு அணிகளும் 5 - 5 என சம அளவில் ஐபிஎல் கோப்பைகளை பெற்றுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் உண்மையில் 2013 இல் தான் முதல் பட்டத்தை வென்றது. கடந்த 10 ஆண்டுகளில், அவர்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒரு முறை ஐந்து பட்டங்களை வென்றுள்ளனர். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் முன்பே சிஎஸ்கே-வுக்கு மற்றொரு எதிரியாக இருந்தது கவுதம் கம்பீரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்" என்று அவர் கூறினார்.

"குறிப்பாக 2012ல் சென்னை ஹாட்ரிக் அடிக்கப் போகும் போது அவர் அவர்களுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். நான் அப்போது சிஎஸ்கே-வுக்காக விளையாடிக் கொண்டிருந்தேன்; சென்னையில் நடந்த இறுதிப்போட்டியில் எங்களை வீழ்த்தினர். அப்போதிருந்து, கவுதம் கம்பீர் சிஎஸ்கே-வுக்கு பெரும் எதிரியாக இருந்து வருகிறார்,"

Story first published: Wednesday, March 20, 2024, 9:09 [IST]
Other articles published on Mar 20, 2024
English summary
IPL 2024 : MS Dhoni's nemesis is Gautam Gambhir says Ravichandran Ashwin
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+