ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் ஆப்கானிஸ்தான் ஆல் - ரவுண்டரும், அந்த அணியின் அனுபவ வீரருமான முகமது நபி, கேப்டன் ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவுகளால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 192 ரன்கள் குவித்த பின் பஞ்சாப் அணியை 14 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என்ற நிலைக்கு கொண்டு சென்ற பின்னரும், கடைசி ஓவர் வரை சென்று தான் போட்டியில் வென்றது மும்பை இந்தியன்ஸ்.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜெரால்ட் கோட்ஸி 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர்.
ஆனாலும், அணியில் பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருந்த அனுபவ சுழற் பந்துவீச்சாளர் முகமது நபிக்கு கடைசி வரை ஓவர் கொடுக்கவில்லை கேப்டன் பாண்டியா. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கவில்லை.

ஆனால், தனிப்பட்ட முறையில் தன்னை கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியில் களமிறங்கச் செய்தும் பந்து வீச வாய்ப்பு அளிக்காதது குறித்து இன்ஸ்டாகிராமில் ஆப்கானிஸ்தான் ரசிகர் ஒருவரின் பதிவை எடுத்து பகிர்ந்து இருக்கிறார். அதில் அந்த ஆப்கானிஸ்தான் ரசிகர், "உங்கள் கேப்டன்களின் சில முடிவுகள் மிகவும் விசித்திரமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இன்று நபி பந்து வீசவே இல்லை. இவர் ஆட்டத்தை மாற்றக் கூடியவர். முக்கியமான நேரத்தில் இரண்டு கேட்ச் மற்றும் ஒரு ரன் அவுட் செய்தார்" என குறிப்பிட்டு இருக்கிறார். அந்த பதிவை அப்படியே பகிர்ந்து இருந்தார் நபி. இதன் மூலம் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீதான தன் அதிருப்தியை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
Story first published: Friday, April 19, 2024, 17:40 [IST]
Other articles published on Apr 19, 2024


Click it and Unblock the Notifications