Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறி வருகிறது. தற்போது வரை எட்டு போட்டியில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் 6 புள்ளிகள் உடன் தற்போது பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

இனி நடைபெறும் ஆறு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் குறைந்தபட்சம் வெற்றியைப் பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக 2020 ஆம் ஆண்டு தான் சாம்பியன் பட்டத்தை வென்றது.

IPL 2024 - Mumbai indians captain Hardik Pandya received stern Warning from ambani family


அதன் பிறகு நடைபெற்ற மூன்று சீசன்களில் ஒருமுறைதான் அவர்கள் பிளே ஆப் பக்கமே வந்தார்கள். இதனால் மும்பை அணியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மாற்றப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஹர்திக் பாண்டியாவும் தற்போது கேப்டன்ஷிப்பில் தடுமாறி வருகிறார். குஜராத் அணியில் இருக்கும் போது அவருடைய கேப்டன்சி சிறப்பாக இருந்தது.

மேலும் குஜராத் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வந்தால் அணி மீண்டும் வெற்றியை நோக்கி செல்லும் என அம்பானி குடும்பத்தினர் போட்ட கணக்கு தற்போது தவறாக முடிந்திருக்கிறது. தற்போது தான் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் இருக்கும் போது நெகராவின் சொல்படி கேட்டு தான் அவர் வெற்றியை பெற்று இருந்திருக்கிறார்.

தற்போது மும்பை அணிக்கு வந்த பிறகு தனியாக தடுமாறுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியாவை நம்பி ஏமாந்து விட்டோமோ என்ற கலக்கத்தில் அம்பானி குடும்பத்தினர் உள்ளனர். இந்த நிலையில் ராஜஸ்தானுக்கு எதிராக மும்பை அணி தோல்வியை தழுவிய போது பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒவ்வொரு வீரரிடமும் குறை இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இது மும்பை அணி நிர்வாகத்தை கடுப்படைய செய்திருக்கிறது. மேலும் போட்டியில் தோற்று விட்டு கேவலமாக சிரித்து ஹர்திக் பாண்டியா செய்வது ரசிகர்களை மேலும் கடுப்படைய செய்திருக்கிறது. இந்த நிலையில் வரும் சனிக்கிழமை ஏப்ரல் 27ஆம் தேதி டெல்லி அணியுடன் மும்பை விளையாடுகிறது. இனி வரும் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறவில்லை என்றால் கேப்டன் பதவியில் இருந்து விலகிச் செல்லும்படி ஹர்திக் பாண்டியாவுக்கு அம்பானி குடும்பத்தினர் எச்சரிக்கை கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனால் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மட்டுமல்லாமல் அவருடைய பேட்டிங்கும் தற்போது அவருக்கு கை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்த மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்துதான் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி எதிர் காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 24, 2024, 6:30 [IST]
Other articles published on Apr 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+