Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்கள் அணியில் தனிப்பட்ட வீரர்களிடம் குறை இருக்கிறது.. MI கேப்டன் ஹர்திக் பரபர புகார்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழாவது போட்டியை வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் ஐந்தாவது தோல்வியை தழுவி இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி தழுவிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தங்களது அணியில் குறை இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

IPL 2024 - Mumbai Indians captain Hardik Panya lost his cool in presentation speech

இது குறித்து பேசிய அவர், ஆரம்ப கட்டத்தில் நாங்களே சில தவறுகளை செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டோம்.ஆனால் திலக் வர்மா மற்றும் நேகல் வதேரா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை சேர்த்தார்கள். எனினும் நாங்கள் நல்ல முறையில் பேட்டிங்கை முடிக்கவில்லை குறைந்தது. 10, 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம்.

இதே போன்று பந்துவீச்சிலும் ஸ்டம்ப்க்கு குறி வைத்து பந்து வீசி இருக்க வேண்டும். நாங்கள் பவர் பிளேவில் அடிப்பதற்கு ஏதுவாக பந்துகளை வீசி விட்டோம். நிச்சயமாக இது எங்களுடைய சிறந்த நாள் கிடையாது. நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாட்டை இன்று மைதானத்தில் வெளிப்படுத்தவில்லை. எங்கள் அணியில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அது அவர்களுக்கு தெரியும்.

நாங்கள் செய்யும் தவறிலிருந்து திருத்திக் கொள்ள வேண்டும். திரும்ப செய்யக்கூடாது. எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கிறது.அது குறித்து அவர்கள் உழைக்க வேண்டும். எங்கள் அணியில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என ரசிகர்கள் கேட்கிறார்கள்.

ஆனால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் ஒவ்வொரு வீரருக்கும் ஆதரவளிக்க விரும்புகின்றேன். அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது குறித்துதான் கவனம் செலுத்துகின்றோம். எங்கள் அணியில் உள்ள திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, April 23, 2024, 6:18 [IST]
Other articles published on Apr 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+