Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இம்முறை ஐபிஎல் கோப்பை மும்பைக்கு தான்.. மலிங்காவின் ஜெராக்ஸ் எடுத்த ஹாட்ரிக் - வீடியோ

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரலாற்றிலேயே அதிக கோப்பைகளை வென்ற அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான். மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மலிங்கா.

பும்ரா போன்ற வீரர்களால் தான் அந்த அணியின் பேட்டிங்கும் பந்துவீச்சும் பலமாக இருக்கும். இந்த நிலையில் பும்ரா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிலையில் மலிங்கா ஓய்வு பெற்றார்.

IPL 2024- Mumbai indians new Player Nuwan Thushara picks hat trick wicket vs srilanka

இதனால் மலிங்கா இல்லாத நிலையில் மும்பை அணி கடுமையாக தடுமாறியது. பும்ராவுக்கு துணை புரிய எந்த வீரமும் இல்லாததால் மும்பை அணி கடந்த மூன்று ஆண்டுகளில் பைனலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு மாற்று வீரரை கண்டுபிடிக்க வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணி தேடியது.

இதில் தற்போது மலிங்காவை போலவே இலங்கை வீரர் நுவான் துஷாரா பந்து வீசுவது தெரியவந்தது. இதனை அடுத்து ஐபிஎல் மினி ஏலத்தில் நுவான் துஷாராவுக்கு சிஎஸ்கே அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் போட்டி போட்டனர். முடிவாக மும்பை இந்தியன்ஸ் அணி துசாராவை ஏலத்தில் எடுத்தது.

தற்போது ஐபிஎல் தொடர் இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை அணி பங்கேற்றது. இதில் துஷாரா பந்து வீசியபோது ஹட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். அப்படியே மலிங்காவை போல் பந்து வீசி யாக்கர்களை அடுத்தடுத்து வீசினார். இதனை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

நான்கு ஓவர் வீசிய துஷாரா 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டத்தின் நான்காவது ஓவர் வரை வீசிய துஷாரா வங்கதேச வீரர்கள் நஜமுல் ஹுசைன், தவ்ஹீத் மற்றும் அஹமதுல்லா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.

இவருடைய பந்துவீச்சை பார்த்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக திகழும் இம்முறை பும்ராவும், துஷாராவும் இணைந்து பந்து வீசுவதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, March 10, 2024, 16:04 [IST]
Other articles published on Mar 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+