Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக், ரோகித் உங்களுக்காக... மும்பை தோல்விக்கு பிறகு அம்பானி மனைவி சொன்னது என்ன?

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தொடர் ஒவ்வொரு அணிக்கும் மிகவும் ஏமாற்றமான சீசன் ஆகவே இது அமைந்திருக்கிறது. ஐபிஎல் தொடரிலே மிகவும் வெற்றிகரமான அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் ,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான்.

இரு அணிகளும் தகுதி பெறாமல் முதல் சுற்றில் நடையை கட்டியது. இதில் இன்னும் சொல்லப்போனால் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியது.

IPL 2024 - Mumbai indians owner Nita ambani message to players including rohit and hardik

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு அனைத்து ரசிகர்களின் கவனமும் மும்பை இந்தியன்ஸ் அணி மீதுதான் இருந்தது. ஏனென்றால் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா அந்த பதவியில் இருந்தார். அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதுவுமே சரியாகவில்லை. இந்த நிலையில் மும்பை அணியின் தோல்வி அடைந்த பிறகு அணி உரிமையாளரான நீதா அம்பானி, மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களிடம் என்ன பேசினார் என்பது குறித்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

இதில் இந்த சீசன் நம் அனைவருக்குமே ஒரு ஏமாற்றமாக தான் அமைந்தது. நம் எதை நினைத்தமோ அதுபடி சீசன் செல்லவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நான் உங்களிடம் சொல்ல விரும்புகின்றேன். நான் இன்னும் பெரிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகையாகவே இருக்கின்றேன். நான் வெறும் உரிமையாளர் மட்டும் கிடையாது.

மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணியும் போது மிகவும் பெருமையாக உணர்கின்றேன். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு அங்கமாக இருப்பதை நான் ஒரு மதிப்பு மிக்க விஷயமாக கருதுகின்றேன். இந்த சீசனில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து நாம் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை செய்வோம். இதன் மூலம் பலமான அணியாக திரும்புவோம் என்று நம்புகிறேன்.

அது மட்டுமல்லாமல் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார், பும்ரா நான்கு பேருக்கும் வாழ்த்துக்கள். இனி ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களுக்காக குரல் கொடுப்பார்கள். டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்படுங்கள் என்று நீதா அம்பானி வாழ்த்து கூறியிருக்கிறார்.

Story first published: Tuesday, May 21, 2024, 21:05 [IST]
Other articles published on May 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+