For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 பந்தில் 32 ரன் அடிச்சும் இப்படியா நடக்கணும்..நொந்து போன டெல்லி வீரர்.. ஆப்பு வைத்த பஞ்சாப் கிங்ஸ்

முல்லான்பூர் : டெல்லி கேபிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் டெல்லி வீரர் அபிஷேக் போரல் இம்பாக்ட் வீரராக களமிறங்கி தன் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணியை நிலைகுலைய வைத்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் எடுத்தாலும் விக்கெட் வீழ்ச்சியால் தடுமாறியது. 17.1 ஓவரில் 138 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து இருந்தது அப்போது கூடுதல் பேட்ஸ்மேன் தேவை என்பதை உணர்ந்த டெல்லி அணி இம்பாக்ட் வீரர் வாய்ப்பை வைத்து அபிஷேக் போரலை களமிறக்கியது.

IPL 2024 PBKS vs DC Abishek Porel 10 ball 32 runs went vain as Punjab beat Delhi

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிக்கி பூயி பேட்டிங் செய்து முடித்து விட்டதால் அவரை வெளியேற்றி விட்டு அபிஷேக் போரல் களமிறங்கினார். 19 ஓவர்களில் டெல்லி அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி ஓவரில் அந்த அணியின் ஸ்கோரை உயர்த்தும் பொறுப்பு அபிஷேக் போரலுக்கு இருந்தது.

அவர் கடைசி ஓவரில் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் 3 ஃபோர், 2 சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் கிடைத்தது. டெல்லி அணி 174 ரன்கள் குவித்தது. இத்தனை பெரிய ஸ்கோர் அடிக்கப்பட்டதால் டெல்லி அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

ஆனால், பஞ்சாப் அணியில் சிறப்பாக பேட்டிங் செய்த சாம் கர்ரன் 47 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அடுத்து கடைசி வரை நின்ற லியாம் லிவிங்க்ஸ்டன் 21 பந்துகளில் 38 ரன்கள் குவிக்க, அந்த அணி 19.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாண்டிங், கங்குலிக்கே விபூதி அடித்த சுட்டிக் குழந்தை.. டெல்லி கேபிடல்ஸ் அணியின் மெகா சொதப்பல்

இதை அடுத்து அபிஷேக் போரலின் அதிரடி ஆட்டத்துக்கு உரிய அங்கீகாரமாக ஆட்டநாயகன் விருது கிடைக்கும் என நினைத்த அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அரைசதம் அடித்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாம் கர்ரன் ஆட்டநாயகன் விருதை வென்றார். பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த 2017 முதல் தனது முதல் ஐபிஎல் போட்டியில் தோல்வி அடைந்ததில்லை. அதை 2024 ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து செய்து இருக்கிறது.

Story first published: Saturday, March 23, 2024, 20:41 [IST]
Other articles published on Mar 23, 2024
English summary
IPL 2024 PBKS vs DC : Abishek Porel 10 ball 32 runs went vain as Punjab beat Delhi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+